ஸ்லெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

Posted By:

சென்னை : ஸ்லெட் எனப்படும் மாநில அளவிலான உதவி பேராசிரியர் தகுதித் தேர்வு வருகின்ற 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதற்கான நுழைவுச் சீட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்லெட் தேர்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை தமிழக அரசு சார்பில் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் நடத்துகிறது.

ஸ்லெட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

தேர்விற்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் இருந்து தங்கள் ஹால் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த முறை ஸ்லெட் தேர்வுக்கு முக்கிய பாடங்களுக்கான வினாக்கள் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படும் என அன்னைதெரசா மகளிர் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவுச் சீட்டினை www.tnsetexam2017mtwu.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தங்கள் ரிஜிஸ்டர் எண்ணை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம் என அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

English summary
TNSET Admit Card 2017 released. Hence, all the exam participants who have successfully applied for the Tamilnadu SET Exam 2017 must download TNSET 2017 Hall Ticket on the below sections

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia