தமிழ்நாட்டின் அரசு பள்ளிகள் நாட்டின் சிறந்தநிலைக்கு தரம் உயர்த்தப்படும்

Posted By:

அகிலஇந்திய போட்டி தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ள தமிழகத்தின் மாணவர்களுக்கு சீடி    வழங்கப்படும் என பள்ளி செங்கோட்டையன் தெரிவித்தார் .

தமிழ்நாட்டின் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தி மாணவர்களின் கல்வி சூழலை மாற்ற திட்டம்

தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை மற்றும் தொல்லியல் துறை சார்பில் சென்னை வட்டாரத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சொற்பொலிவுகள் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக கலையரங்கில் நேற்று நடைபெற்றது .

பள்ளி கல்வித்துறை அமைச்சர் பண்டைய வரலாறு குறித்து பாடல்கள் வெளியிட்டுவிழாவில் பேசிய உயர்கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசினார் .
மதுரை அழகர்புரம் பண்டைகாலத்தில் துறைமுகமாக இருந்துள்ளது . அரியலூர் , பெரம்பளூர் பகுதிகளில் கிடைத்த தொல்லியல் தகவல்களை ஆராய்ந்து பார்க்கும் போது 2000 வருடங்களுக்கு முன் கடல்பகுதி இருந்தாக தெரியவருகின்றது .

மத்திய அரசு கொண்டுவரும் பொதுதேர்வு குறித்து மாணவர்கள் அச்சம் இன்னும் மூன்று மாதங்களில் தீர்க்கப்படும் என்றார் . மாணவர்களுக்கு நவீன தெளிவுடன் கூடிய படங்களை கொண்ட விளக்கங்கள் அடங்கிய 54000 கேள்விகளுடன் சீடிகள் உருவாக்கப்பட்டு வழங்கப்படும் என்றார்.

சீருடை வழங்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறேம் . ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒரே நிறத்தில் சீருடை மாற்றி 1 முதல் 5 வகுப்புகள் வரை ஒரு நிறத்திலும் 6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நிறமும் 11, 12 வகுப்பு வரை என மூன்று நிறங்களில் சீருடை மாற்றம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது . இதற்கு முன் மாணவர்களுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்பட்டன இனிமேல் இரண்டு வழங்கப்படும் மற்ற இரண்டிற்க்கான சீருடை செட்டுகளுக்கான தொகை மாணவர்கள் கையில் கொடுக்கப்படும் மாணவர்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி சீருடையை தைத்து போட்டுகொள்ளலாம் என்றார் . 

கல்வித்துறையில் தன்னை விமர்சிப்பது குறித்து கவலயில்லை என்றும்  இன்னும் கொஞ்ச நாட்களில் தமிழகம் நாட்டிற்கு முன்னுதரனமாக திகழும் என்றார் . வெளிப்படைத்தன்மையுடன் தான் நடந்துகொள்வதாக கூறினார் . பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வு குறித்து சிறப்பான பாடங்களும் தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்கு திறனுடன் பாடம் எடுக்க தரமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் மற்றும் ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் மூலமாவது ஆசிரியர்களை நியமித்து பாடம் கற்றுத்தர பரிந்துறைக்கப்பட்டுள்ளது . 

சார்ந்த பதிவுகள்:

புதுபொலிவுடன் தமிழக பள்ளிக்கல்வி இணையதளம் மாற்றம் பெற்றுள்ளது !!

தமிழக பள்ளிகளின் வளர்ச்சி மேம்பாட்டுக்கு உருதுணையாக இருந்த கல்வித்துறை செயலர் மாற்றமா

அடடே!!,, இமேஜ் மேங்கில் பாடங்களை கற்கபோகும் தமிழகப் பள்ளி மாணவர்கள் !!! 

English summary
above mentioned Tamilnadu schools development

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia