திறக்கப்பட்டன பள்ளிகள்.. 1 கோடியே 3 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்!

Posted By:

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு, நீண்ட விடுமுறைக்குப் பின்பு மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர். 14 இலவசப் பொருட்கள் இன்றே வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

நீண்ட விடுமுறைக்குப் பின் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் தங்கள் நண்பர்களை சந்திக்கப் போகும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பள்ளிக்குச் சென்றனர்.

அரசு பள்ளிகளுக்கு ஏப்ரல் 14ந் தேதியும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ந் தேதியும் கோடை விடுமுறை விடப்பட்டது. அதற்கு பின்பு இன்று ஜூன் 7ந் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. புதுச்சேரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைத் தவிர மற்ற மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

திறக்கப்பட்டன பள்ளிகள்.. 1 கோடியே 3 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள்!

நீண்ட நாளைக்குப் பின்பு காலை நேரத்தில் சாலைகளில் பயங்கர நெருக்கடி காணப்பட்டது. முதல் நாள் பள்ளிகள் திறக்கப்படுவதால் மாணவ மாணவியர்கள் உற்சாகத்துடன் முந்தியடித்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றனர்.

மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆரம்பித்து வைத்தார்.

பள்ளித் திறந்த முதல் நாளிலேயே 1 கோடியே 3 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் ஒரு வாரத்திற்குள் இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

14 இலவசப் பொருட்களும் பள்ளித் துவக்க நாளிலேயே வழங்கப்படுவது மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும்

English summary
The School Education minister K.A. Sengottaiyan told that On the first day of school, 1 crore 3 lakh students are offered free note books.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia