ஆசிரியர்கள் இட மாறுதல் கலந்தாய்வு.... மே 19 முதல் ஆரம்பம்......

Posted By:

சென்னை : ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்காக கலந்ததாய்வு மே 19ந் தேதி தொடங்கி மே 31ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிமாற்றம் மற்றும் பதவி உயர்விற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏப்ரல்24ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆசிரியர்களுடைய நலனுக்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தள்ளது.

வழிகாட்டுதல் நெறிமுறைகள்

வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்ற அரசின் முடிவிற்கேற்ப 2017-2018ஆம் கல்வி ஆண்டில் அரசு, நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

பொது மாறுதல் கலந்தாய்வு

பொது மாறுதல் கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக நடைபெறவுள்ளது. ஆசிரியர்களின் பொது மாறுதல் தொடர்பாக ஆசிரியர்களிடமிருந்து மாறுதல் விண்ணப்பங்கள் ஏப்ரல் 24ந் தேதி முதல் மே மாதம் 5ந் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் பெறப்படும் இடம்

அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்களை பொறுத்தவரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலுகத்திலும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகத்திலும் மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்படும்.

கலந்தாய்வு தேதி

மே 19ந் தேதி முதல் மே 31ந் தேதி முடிய மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இணையதளம் வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Department of School Education Tamilnadu is Under Government Organization to Responsible For Education Related Facilities in State.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia