உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ் உள்ளிட்டு அடுத்தடுத்து வரும் நாட்களைத் தொடர்ந்து, தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு தொடக்கம் என தொடர்ந்து வருவதால் அனைத்துப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு சனிக்கிழமை முதல் 2020 ஜனவரி 1ம் தேதி வரையில் தமிழக அரசின் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அன்றைய தினங்களில் நடைபெறவிருந்த இணைப்புப் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
தேர்வு தேதிகள் விபரம்
டிசம்பர் 21-ம் தேதியன்று நடைபெறவிருந்த தேர்வுகள் 2020 ஜனவரி 4-ஆம் தேதிக்கும், டிசம்பர் 23-இல் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 6-ஆம் தேதிக்கும், டிசம்பர் 24 தேர்வுகள் ஜனவரி 7-ஆம் தேதிக்கும், டிசம்பர் 26 தேர்வுகள் ஜனவரி 8-ஆம் தேதிக்கும், டிசம்பர் 27 தேர்வுகள் ஜனவரி 2-ஆம் தேதிக்கும், டிசம்பர் 28 நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 9-ஆம் தேதிக்கும், டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி 3-ஆம் தேதிக்கும், டிசம்பர் 31 தேர்வுகள் ஜனவரி 10-ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications












