உயர்கல்வி மன்றத்தின் காலிப்பணியிடங்களால் கல்லுரி நலத்திட்டங்கள் முடக்கம்

Posted By:

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பபடாததால் , மன்றத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு கல்லுரி நலத்திட்டங்கள் செயல்படாமல் உள்ளன என பேராசிரியர்களும் கல்லுரி கல்வி நிர்வாகத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

கல்லுரி , பல்கலைகழக மாணவர்கள் மேம்பாட்டிற்கு திட்டங்கள் வகுத்த கல்விமன்றம் செயல்படவில்லை

1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உயர்கல்வி மன்றமானது கல்லுரி, ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்க்கை , பல்கலைகழகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்குபடுத்துவது புதிய கல்லுரிகள் தொடங்குவது போன்ற பல்வேறு செயல்களின் முன்னோடியாக உயர்கல்வி மன்றம் விளங்கிவந்தது .

மாநில உயர்கல்விமன்ற திட்டத்தின்படி கல்லுரிகளில் மாணவர்களின் அறிவை மேம்படுத்தவும், ஆங்கில அறிவை பலப்படுத்தவும் திட்டங்கள் வரையறுக்கப்பட்டது. அரசு கலை அறிவியல் கல்லுரி மாணவர்கள் ஆறுமாதம் வெளிநாடு பயணம் செய்து குறிப்பிட்ட நாடுகளின் கலாச்சாரம் வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்க உயர்க்கல்வி மன்றம் அறிவித்தது . ஆனால் தற்பொது உயர்கல்வி மன்றத்தின் செயலாளர் பணி மற்றும் 2 ஆண்டுகளாகவும், துணை தலைவர் பணி 4 ஆண்டுகளாகவும் காலியாக உள்ளன. உயர் கல்வி மன்றம் முடங்கி கிடப்பதால் 2016- 2017 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கான எந்த திட்டமும் செயல்படாமல் உள்ளன .

100 சதவீகித முடிவடைந்த மாநிலத் திட்டம் ஒருங்கிணைந்த பாடத்திட்டம், கல்வியில் பின்த்தங்கியுள்ள மாணவர்களை மேம்படுத்தும்திட்டம் , மாநிலத்தில் மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு உதவும் சாஃப்ட் ஸ்கில் திட்டம் அத்துடன் பல்வேறு திட்டங்கள் ஆளில்லாத காரணத்தால் முடங்கி போயுள்ளன . ஆகையால் அரசு விரைந்து செயல்பட்டு உயர்க்கல்வி மன்றங்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் .

சார்ந்த பதிவுகள்: 

அனைத்து கல்லுரிகளும் யுஜிசியின் அறிவிப்புபடி நாக் தர மதிப்பீடு பெற்றிருக்க வேண்டும் 

English summary
here article tell about issues of tamilnadu higher education council vacancy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia