அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பபடுமென தமிழக அரசு அறிவுப்பு

Posted By:

சட்டசபையில் அங்கன்வாடி பணியாளருக்கு இந்த வருடம் 30ஆயிரம் பேர் நிரப்படுவார்கள் என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார். மாற்று திறனாளிகளிக்கு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுவதாக அறிவிப்பு .சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் விதவை பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது . திருமண உதவி, தாலிக்கு தங்கம் பெறும் திட்டத்தில் பதிவு செய்ய பஞ்சாயத்துகளில் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்கள் அமைக்க முடிவு. அங்கன்வாடி காலிப்பணியிடம் நிரப்புவது தொடர்பாக இருந்த இடையூறான வழக்கு முடிவை தொடர்ந்து 30ஆயிரம் பணியிடம் நிரப்பும் பணி விரைந்து நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது .

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்ப சட்டசபையில் தீர்மானம் நிரைவேற்றம்

அரசு அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு மற்றும் கர்ப்பிணிகளுக்கு தேவையான சத்துமாவுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு அடிப்படையான பாடங்கள் கற்றுகொடுக்கப்பட்டு அவர்களுக்கு உணவு பயிர்களுடன் ஊட்டமுள்ள முட்டையும் வழங்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றனர்.

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்ப சட்டசபையில் தீர்மானம் நிரைவேற்றம்

அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளிகள் எல்லாம் புத்துயிர் பெறும் வாய்ப்புகிட்டும் . மேலும் சிறப்பான யுக்திகளுடன் செயல்படமுடியும். மேலும் பல வீடுகளில் உள்ள வறுமை காரணமாக அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்புகின்றனர் இதன்மூலம்  குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கப்படும் . அரசு அறிவிப்போடு நிறுத்திகொள்ளாமல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டவேண்டும் என்பது அணைவரின் ஆவல் ஆகும்
அரசு முதல்கட்ட மாக 11 ஆயிரம் பேருக்கான பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியாளர்களிடம் இதுகுறித்து காலிப்பணியிடங்கள் விவரங்கள் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளது . அங்கன்வாடி ஊழியருக்கான மாத ஊதியம் ரூபாய் 25000 முதல் வழங்கப்படுகிறது . அங்கன்வாடி உதவியாளருக்கு ரூபாய் 18000 மற்றும் 13000 வழங்கப்படுகிறது.

English summary
here article mentioned about announcement of Tamilnadu government to filling anganvaadi vacancy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia