தமிழக அரசு சுற்றுசூழலை மேம்படுத்த புதியதிட்டங்களை வகுத்துள்ளது

Posted By:

தமிழகத்தில் சுற்றுசூழல் கல்விமூலம் சுற்றுசூழலை பாதுகாக்கவும், இது குறித்து மாணவர்களுக்கு ஆர்வம் பெருக வேண்டி தமிழக அரசு திட்டமிட்டுள்ளது .  தமிழக அரசு சுற்று சூழல் பற்றிய விழிப்புணர்ச்சியையும் அதன் அவசியத்தை மாணவர்கள் மூலம் உணர்த்த திட்டமிட்டுள்ளது .

சுற்று சூழல்  பாதுகாப்பு  அனைவருக்கும் அவசியமாகும் .  சுற்றுசூழல் கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம். மாநில அரசு நடத்தும் சுற்றுசூழல் போட்டியில் வெல்பவரை சுற்றுலா அழைத்து செல்லப்படும் .

 

தமிழக அரசின் சுற்றுசூழல் கல்வி திட்டம்


32 மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு லடசம் செலவில் மொத்தம் ரூபாய் 64லட்சம் செலவில் மரம் நட அரசு தீர்மானித்துள்ளது . ஒவ்வொரு பள்ளியிலும் 50 மாணவர்களுக்கு மரக்கன்று தரப்படும் .மாவட்டம் தோறும் அது விரிவுப்படுத்தி தரப்படும் . இவ்வாறு மரம் வளர்க்கும் முறையை விரிவுப் படுத்த அரசு திட்டமிட்டுள்ளது .

ஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் 15000 செலவில் ரூபாய் 1.15 கோடி செலவிடப்படும் . மேலும் நாமக்கல் மற்றும் குமாரபாளையம் ,கும்மிடிபூண்டி, திருவள்ளூர் பகுதியில் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் அமைக்கப்ப்டும் .

சுற்றுசூழல் போட்டியில் சிறந்து வழங்கும் பள்ளிக்கு அரசு ரூபாய் 2 கோடி அரசு வழங்க முடிவெடுத்துள்ளது . இதற்கு முன் தமிழக அரசு சுற்றுசூழல் கல்வியை மாணவர்களுக்கு புகட்ட ஒவ்வொரு வகுப்பிற்கும் சுற்றுசூழல் கல்வி புத்தகம் வழங்கியது . இதன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு வைத்து விழிப்புணர்வு வழங்கியது தற்பொழுது அரசு செயல் முறை கல்வியில் இறங்கியுள்ளது . இது சுற்றுசூழல் பற்றி அறிய நல்ல வாய்ப்பாகும்.

English summary
here article mentioned about new scheme to develop environmental among students by Tamilnadu government

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia