பிஆர்க் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் ஜேஇஇ புறக்கணிப்பட்டுள்ளது

Posted By:

மத்திய அரசு நடத்தும் ஜேஇஇ தேர்வுக்கு தமிழக அரசு தடைவித்துள்ளது . பிஆர்க் படிக்க நிர்வாக ஒதுக்கீட்டில் மட்டுமே சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது 

தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் 53 பிஆர்க் கல்லுரிகள் செயல்படுகின்றன. அவற்றில் கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பிஆர்க் கல்லுரிகளுக்கான 2720 இடங்களுக்கு கவுன்சிலிங் நடைபெறுகிறது . மத்திய அரசு நடத்தும் நாட்டா தேர்வில் 2009 பேர் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். 1000கணக்கில் காலியிடங்கள் உள்ளன. மேலும் நாட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பிஆர்க் படிக்க சேருவார்கள் என்பது உறுதியில்லை.

ஆர்கிடெக்சர் படிப்புகளுக்கான கவுன்சிலிங் அறிவிப்பில் மாணவர்கள் பெற்றோர்கள் கவலை

ஆயிரக்கணக்கான பிஆர்க் இடங்கள் காலியாக உள்ளன , அதனை நிரப்ப பிஆர்க் கல்லுரிகளில் சில சலுகைகளை மூலம் காலியிடங்களை நிரப்புவார்கள். ஜேஇஇ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அந்த தேர்வின் மதிபெண் வைத்து ஆர்கிடெக்சர் படிக்க மாணவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால் அண்ணா பல்கலைகழகம் இந்தவருடம் ஜேஇஇ தேர்வு எழுதியும் பிஆர்க் கவுன்சிலிங்கில் அது குறித்து தகவல்கள்    சேர்க்காமல் நிர்வாக ஒதுக்கீடு குறித்து கவுன்சிலிங்கில் அறிவித்திருந்தது இதுகுறித்து அண்னா பல்கலைகழகத்தில் கேட்டபொழுது , அண்ணா பல்கலைகழகம் அளித்த பதிலில் தமிழக அரசு பிஆர்க் படிப்பிற்கு ஜேஇஇ தேர்வினை அங்கிகரிக்கவில்லை என்றது . ஆகவே மாணவர்களை நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துகொள்ளுமாறு தெரிவித்தது . எனவே நாட்டவை விட அதிக தரம் கொண்ட ஜேஇஇ தேர்வு எழுதிய மாணவர்களும் ரூபாய் 5 லட்சம் கொடுத்து நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது என மாணவர்களும் பெற்றோர்களும் தமிழக அரசின் நிலையற்ற போக்கு கருதி கவலையடைந்துள்ளனர்.

சார்ந்த படிப்புகள் :

 பிஆர்க் படிப்புகளளுக்கான சேர்க்கை விவரங்கள் அண்ணா பல்கலைகழகம் வெளியீடு

English summary
above article tell about baerc admission issues

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia