நீட்தேர்வு எழுதுவதிலிருந்து தமிழகத்திற்கு ஓர் ஆண்டு விலக்கு மத்திய அரசு ஒப்புதல்

நீட்தேர்வு எழுதுவதிலிருந்து தமிழ்நாடு ஒருவருடம் விலக்கு பெற்றுள்ளது

By Sobana

நீட் தேர்வு எழுத தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு அளித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது . நீட் தேர்வு எழுத தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியிருந்தது ஆனால் அதுகுறித்து மத்திய அரசு அமைதிகாத்து எந்த பதிலும் அளிக்கவில்லை .

நீட்தேர்வு  எழுத  தமிழகத்திற்கு  ஓர் ஆண்டு  விலக்கு அறிவிப்புகாக  காத்திருப்பு

நீட் தேர்வு எழுத மத்திய அரசு எந்த பதிலும் தராததால் தமிழகத்திற்கு நீட் தேர்வு எழுதுவதிலிருந்து இரண்டு ஆண்டுகளாவது விலக்கு அளிக்க வேண்டும் என கூறப்பட்டது . நீட் தேர்வு எழுதுவது பின் ஓராண்டாக குறைக்கப்பட்டது . மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற தமிழக சுகாத்துறை செயலர் டெல்லி சென்றார் . மத்திய அரசு நீட்தேர்வு எழுதுவதிலிருந்து ஓராண்டு விலக்கு பெற ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசின் அட்டர்னி ஜென்ரல் வேணுகோபால் நேற்று அறிவித்தார் . இதுகுறித்து மத்திய அரசின் உளத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியதும் இது குடியரசு தலைவர் ஒப்புதலை பெற்று எந்நேரமும் சட்டமாக வெளிவரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வு குறித்து சட்டரீதியாக அனுக தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையென மத்திய அரசு அறிவித்துள்ளது . அதே வேளையில் நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் நீட்தேர்வுக்கு சாதகமாக முடிந்துள்ளது. நீட் தேர்வு முடிந்த நிலையில் மாணவர்களுக்கான இன்னும் கவுன்சிலிங் நடைபெறாததால் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் குழப்பமும் எப்போது கவுன்சிலிங் நடைபெறும் எனும் கேள்வியும் எழுந்தவண்ணமே உள்ளன .

நீட்தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார்நிலையில் கொண்டுவர அரசும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக பல்வேறு நடவடிக்கைகளையெடுத்து மாணவர்களுக்கான பாடபுத்தகங்களை தரமானதாக மாற்ற குழு அமைத்து விரைந்து செயல்பட்டு வருகின்றது . மாணவர்களுக்கான தரமான வினாவங்கி 54000 கேள்வி பதில்கள் அடங்கிய வினாவங்கியை தயாரித்து வழங்கவும்,படங்களின் மூலம் சீடியாக வழங்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது . இது தொரடர்பாக மாணவர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகின்றது .

சார்ந்த பதிவுகள் :

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமாநீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா

மருத்துவம் , வேளாண்மை, பொறியியல் கவுன்சிலிங்கள் நீட் தேர்வுக்குப்பின் ஸ்தம்பிப்புமருத்துவம் , வேளாண்மை, பொறியியல் கவுன்சிலிங்கள் நீட் தேர்வுக்குப்பின் ஸ்தம்பிப்பு

மருத்துவ சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% இடஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!மருத்துவ சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% இடஒதுக்கீடு.. அரசாணை வெளியீடு..!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article tell about Tamilnadu got exception from neet exams for one year
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X