உலகிலேயே எடை குறைவான செயற்கைக் கோள்! வியந்துபோன நாசா!

உலகிலேயே சிறியதாகவும், எடை குறைவானதாகவும் கொண்ட செயற்கைக் கோளை வடிவமைத்து தமிழக மாணவர் சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே சிறியதாகவும், எடை குறைவானதாகவும் கொண்ட செயற்கைக் கோளை வடிவமைத்து தமிழக மாணவர் சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே எடை குறைவான செயற்கைக் கோள்! வியந்துபோன நாசா!

தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ரியாஸூதீன் (18). தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலை.யில், பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் 2-ம் ஆண்டு படித்து வரும் இவர் உலகிலேயே சிறியதாகவும், எடை குறைவானதாகவும் செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளார். இந்த சிறிய ரக செயற்கைக்கோள் 2021-ஆம் ஆண்டு நாசா விண்வெளி தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதுகுறித்து மாணவர் ரியாஸூதீன் கூறுகையில், நாசா விண்வெளி மையம் மற்றும், ஐ டூ லேனிங் உள்ளிட்டவை இணைந்து நடத்திய 'க்யூப் இன் ஸ்பேஸ்' என்ற விண்வெளி ஆராய்ச்சி போட்டிகளில் 73 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் நான் உருவாக்கிய விஷன்- 1, விஷன்- 2 என்ற 2 செயற்கைக் கோள்களைத் தேர்வு செய்துள்ள நாசா அதற்கான சான்றிதழ்களையும் வழங்கியுள்ளது.

இந்த 2 சிறிய வடிவிலான செயற்கைக் கோள்களும் தலா 37 மி.மீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டதாக வடிவமைத்துள்ளேன். விஷன்- 1 செயற்கைக் கோள் 2021 ஜூன் மாதம் நாசா விண்வெளி தளத்திலிருந்து, எஸ்.ஆர்- 7 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.

அதேபோல விஷன்- 2 செயற்கைக்கோள் ஆர்.பி-6 என்கிற தளத்திலிருந்து ஆராய்ச்சி பலூனில் பறக்கவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Student make world's smallest and lightest satellite
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X