ஜனவரியில் ஜாம் ஜாமென டிஜிட்டலாக்கப்படும் தமிழக பள்ளிகள் !!

Posted By:

ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிளும் கம்பியூட்டர்கள் நிறுவப்பட்டு டிஜிட்டல் பள்ளிகளாக கலக்கும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக பள்ளிகள் டிஜிட்டல் ஆக்குவது குறித்து தமிழக அரசு அறிவிப்பு

பழமை வாய்ந்த நூல்களின் அவசியமும் , நூல்கள் , ஓலைச்சுவடிகள் , பழமையான தகவல்கள் அடங்கிய புத்தகங்களின் தேவைகள் அதனை பாதுகாத்து மாணவர்கள் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை தெரிவித்தார் கல்வி அமைச்சர்.

நூலக விழாவில் பங்கேற்ற கல்வி அமைச்சர் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் டிஜிட்டல் முறையாக்கப்பட்ட கல்வி வழங்கப்படும் அதுவும் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் .

தமிழக பள்ளிகளில் இமேஜ் முறையில் பாடங்கள் கற்ப்பித்தல் குறித்து அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது . தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு தொடர்பாக பயிற்சி பெற 400க்கு மேல் மையங்கள் உருவாக்கி பயிற்சி அளிக்கப்படும் என அரசு அறிவித்தது . மாணவர்கள் பயிற்சி பெற விண்ணப்பிக்கவும் குறிப்பிட்டிருந்தது . தமிழக அரசு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க விண்ணப்பிக்க கால தேதியை அக்டோபரிலிருந்து நவம்பர் முதல் வாரம் வரை அதிகரித்து அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு போட்டி தேர்வில் வெற்றி பெற சிறந்த பயிற்சிகள் அளிக்கப்படும் . சிறந்த பயிற்சிகள் மாணவர்கள் பெற ஆசிரியர்கள் ஆந்திரா சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். அவர்களை வைத்து 3000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் மூலம் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என்றார். மாணவர்களுக்கான பயிற்சிகள் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மற்றும் மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் திறன்பட எதிர்கொள்ள மாணவர்களுக்கு அளிப்படவே இந்த பயிற்சி மையங்களின் நோக்கம் ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

நீட்த் தேர்வு தொடர்பான மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ள பயிற்சி மையங்கள்!!

மாணவர்களுக்கு மும்மொழிக்கல்வி கற்பிப்பது குறித்து அரசு திட்டம்

டிசம்பரில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை எது முதல் சுதந்திர போர்? வேலூரா, பைகா புரட்சியா 

English summary
here article tell about digitalis schools scheme by Tamilnadu government

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia