இனி உள்ளேன் ஐயா வேண்டாம், உங்க மூஞ்சியே போதும்...!

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையைப் பதிவு செய்ய முக அடையாளத்தினைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மூலம் வருகைப் பதிவு செய்யும் புதிய முறையினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையைப் பதிவு செய்ய முக அடையாளத்தினைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மூலம் வருகைப் பதிவு செய்யும் புதிய முறையினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்துள்ளார்.

இனி உள்ளேன் ஐயா வேண்டாம், உங்க மூஞ்சியே போதும்...!

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் சமீப காலமாக பல்வேறு மாற்றங்கள், வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. அவற்றில் தற்போது மாணவர்களின் முகத்தினைக் கொண்டு வருகை பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குரூப் செல்ஃபியா ?

குரூப் செல்ஃபியா ?


முக அடையாளம் மூலம் வருகை பதிவு செய்யும் செயலியில், மாணவர்களின் புகைப்படங்கள், பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் சேமிக்கப்படும். ஆசிரியர் செல்போனில் மாணவர்களைக் குழுவாக படம் பிடித்தால் வகுப்புக்கு வந்துள்ள, வராத மாணவர்களின் விவரங்கள் தெளிவாகக் காண்பித்து விடும்.

டக்குனு மாட்டிக்குவீங்க

டக்குனு மாட்டிக்குவீங்க


புகைப்படம் தெளிவாக பதிவாகவில்லை என்றால் அதற்கான ஒலியும் ஒலிக்கும். மீண்டும் படம் பிடித்து வருகையைப் பதிவு செய்யலாம். வருகை விவரங்கள் உடனடியாக தலைமை ஆசிரியர், மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளி கல்வித்துறை தலைமை அதிகாரி மற்றும் பெற்றோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் சென்றுவிடும்.

மாணவர்களே ஜாக்கிரதை

மாணவர்களே ஜாக்கிரதை


இவற்றின் கூடுதல் அம்சம், இந்தத் தகவல்கள் அனைத்தையும் இணையதளத்திலும் சேமித்து வைத்து தேவையின் போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் சோதனை முறையில் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவிகள் 54 பேரின் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்கள் சோதனைக்குப் பின் சென்னையின் உள்ள பிற பள்ளிகளிலும், அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளிலும் படிப்படியாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

பாதுகா(ஆ)ப்பு..?!

பாதுகா(ஆ)ப்பு..?!


செயற்கை நுண்ணறிவு வருகைப்பதிவு தொழில்நுட்பத்தின் மூலம், மாணவிகள் பள்ளிக்கு வரும் நேரமும், பள்ளி முடிந்து வெளியேறும் நேரமும் பெற்றோருக்கு செல்போனில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இதன் மூலம் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

இதுவேறயா..!

இதுவேறயா..!


இந்தச் செயலியின் மூலமாகவே தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், செயல்பாடுகள் குறித்த விவரங்களை, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க முடியும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu schools to launch Facial recognition app to replace attendance registers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+