டி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் ரிலீஸ்.. நீங்க பார்த்துட்டீங்களா?

Posted By:

சென்னை :டி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் 21.02.2017 அன்று வெளியிடப்பட்டுளளது. டி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி நடை பெற்றது. இந்தத் தேர்வு 2015 - 16ம் ஆண்டிற்கான காலி இடங்கள் நிரப்பப்படுவதற்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வாகும்.

டி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி நடை பெற்றது. இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை-I, நில அளவர், தட்டச்சர், வரைவாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 5451 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12,51,291 விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்வினை கடந்த வருடம் நவம்பர் மாதம் எழுதினார்கள். அதில் 11,50,396 விண்ணப்பதாரர்களுக்கான மார்க் மற்றும் ரேங்க் ஆகியவைகள் டி.என்.பி.எஸ்சி இணையதளத்தில் வெளியிட்ப்பட்டுள்ளன.

டி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்விற்கான முடிவுகள் ரிலீஸ்..  நீங்க பார்த்துட்டீங்களா?

விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு முடிவினை www.tnpsc.gov.in இணையதளத்திற்குச் சென்று latest results என்பதனைக் கிளிக் செய்து அதில் உங்கள் பதிவு எண்னைக் (ரிஜிஸ்டர் நம்பர்) குறிப்பிட்டால் உங்களுக்கான ரிசல்ட் வந்து விடும். அதில் நீங்கள் என்ன மார்க் மற்றும் ரேங்க் பெற்றிருக்கிறீர்கள் என்ற தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். ரேங்க் பட்டியல் என்பது அவரவர் சார்ந்த பிரிவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் அவரவர் பிரிவின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டிருக்கும் காலிஇடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பற்றிய தகவல்களும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். பின்பு அவர்கள் சான்றிதழ் சரிப் பார்ப்பிற்காக அழைக்கப்படுவார்கள். சான்றிதழ் சரிப் பார்ப்புக்கு 2017 மார்ச் 20ம் தேதி முதல் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள் என
டி.என்.பி.எஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சான்றிதழ் சரிப் பார்ப்பின் போது கொடுக்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் தவறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் பணி நியமனத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்.

English summary
The Tamil Nadu Public Service Commission (TNPSC) on February 21, 2017 declared the results of the written examination held for direct recruitment to various Group-IV Services posts for the year 2015-2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia