உதவி புவியியலாளர் வேலை வாய்ப்பு.. டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.

Posted By:

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) புவியியல் பட்டதாரிகளுக்கான உதவி புவியியலாளர் போன்ற தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 53 காலிஇடங்கள் நிரப்பப்படுவாத அறிவிக்கப்பட்டுள்ளது. காலி இடங்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை 22,02,2017 அன்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு 2017 24 ஜீன் மற்றும் 25 ஜீன் ஆகிய இரு தினங்களிலும் நடக்கவிருக்கிறது.

புவியமைப்பியல் மற்றும் சுரங்கத்துறையில் - உதவி புவியியலாளர் பணிக்கு 25 காலிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி புவியியலாளர் வேலை வாய்ப்பு.. டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.

பொதுப்பணித்துறையில் - உதவி புவியியலாளர் பணிக்கு 15 காலிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பொறியில் துறையில் - உதவி புவியியலாளர் பணிக்கு 10 காலிஇடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையில் - புவியியலாளர் பணிக்கு 3 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 53 காலி இடங்களை புவியியல் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பவிருக்கிறது தமிழ் நாடு பொது சேவை ஆணைக்குழு.

கல்வி தகுதி -

புவியமைப்பியல் மற்றும் சுரங்கத்துறையில் உள்ள உதவி புவியியலாளர் பணிக்கு - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் புவிஅமைப்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துறையில் அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பொதுப்பணித்துறையில் உள்ள உதவி புவியியலாளர் பணிக்கு - பல்கலைக்கழகம் மானியக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் புவியமைப்பில் அறிவியல் மாஸ்டர் பட்டம் அல்லது பயனுறு புவியமைப்பில் முதுகலை அறிவியல் பட்டம் அல்லது ஹைட்ரோஜியாலஜியில் அறிவியல் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேளாண் பொறியில் துறையில் உள்ள உதவி புவியியலாளர் பணிக்கு - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் புவிஅமைப்பியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறையில் உள்ள புவியியலாளர் பணிக்கு - புவிஅமைப்பியலில் முகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கட்டணம் :

ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு Rs. 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தேர்வுக் கட்டணமாக Rs. 100 வசூலிக்கப்படுகிறது.

எஸசி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் எதுவும் கிடையாது. கணவரை இழந்தவர்கள் (ஆர்டிஓ/ சப் கலெக்டர் இடமிருந்து சான்றிதழ் பெற்றவரா இருக்க வேண்டும்) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. (மாற்றுத் திறனாளியாக 40% சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது)

எம்பிசி (சீர்மரபினர் சமூகங்கள்), பிசி (முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள்) பிசி (முஸ்லீம்கள் மட்டும்) ஆகிய பிரிவைச் சார்ந்த பட்டதாரிகள் முதல் 3 முறை தேர்வினை இலவசமாக எழுதலாம். அதன் பிறகு தேர்வுக் கட்டணம் கட்டாயம் செலுத்தித்தான் தேர்வு எழுத முடியும்.

எக்ஸ் சர்வீஸ் மென் -

முதல் 2 முறை தேர்வினை இலவசமாக எழுதலாம். அதன் பிறகு தேர்வுக் கட்டணம் கட்டாயம் செலுத்தித்தான் தேர்வு எழுத முடியும்.

வயது வரம்பு :

புவியமைப்பியல் மற்றும் சுரங்கத்துறையில் - உதவி புவியியலாளர் மற்றும் பொதுப்பணித்துறையில் உள்ள உதவி புவியியலாளர் பணிக்கு

எஸ்சி, எஸ்டி பிரிவினர், எம்பிசி (சீர்மரபினர் சமூகங்கள்), பிசி (முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள்) பிசி (முஸ்லீம்கள் மட்டும்) ஆகிய பிரிவினர் மற்றும் அனைத்து பிரிவிலும் உள்ள கணவரை இழந்தவர்கள் ஆகியோருக்கு - வயது வரம்வு கிடையாது. இதனைத் தவிர மற்றவர்கள் 30 வயதிற்குக் கீழ்பட்டவராக இருக்க வேண்டும்.

வேளாண் பொறியில் துறையில் - உதவி புவியியலாளர் பணிக்கு - எஸ்சி, எஸ்டி பிரிவினர், எம்பிசி (சீர்மரபினர் சமூகங்கள்), பிசி (முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள்) பிசி (முஸ்லீம்கள் மட்டும்) ஆகிய பிரிவினர் மற்றும் அனைத்து பிரிவிலும் உள்ள கணவரை இழந்தவர்கள் ஆகியோருக்கு - வயது வரம்வு கிடையாது இதனைத் தவிர மற்றவர்கள் 30 வயதிற்குக் கீழ்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் பிஎஸ்சி (ஹானர்ஸ்) அல்லது எம்எஸ்சி (புவியமைப்பியல்) படித்தவர்கள் புவியமைப்பியல் சர்வே அல்லது எலக்ட்ரிக்கல் லாக்கிங் இல் 3 வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு வயது வரம்பு சலுகையில் 5 வருடம் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறையில் - புவியியலாளர் பணிக்கு - எஸ்சி, எஸ்டி பிரிவினர், எம்பிசி (சீர்மரபினர் சமூகங்கள்), பிசி (முஸ்லீம்களைத் தவிர மற்றவர்கள்) பிசி (முஸ்லீம்கள் மட்டும்) ஆகிய பிரிவினர் மற்றும் அனைத்து பிரிவிலும் உள்ள கணவரை இழந்தவர்கள் ஆகியவர்கள் 33 வயதிற்குட்டவர்களாக இருக்க வேண்டும். இதனைத் தவிர மற்றவர்கள் 30 வயதிற்குக் கீழ்பட்டவராக இருக்க வேண்டும்.

தேர்வு நடை பெறும் நாட்கள் :

டின்பிஎஸ்சி தேர்வு புவியமைப்பியலில் பட்டம் பெற்றவர்களுக்கு 2 கட்டத் தேர்வாகவும், முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு ஒரேத் தேர்வாகவும் நடத்தப்படுகிறது.

புவியமைப்பியலில் பட்டம் பெற்றவர்களுக்கு 2017 ஜீன் 24ம் தேதி காலை 10 மணி முதல் 1வரை முதல் தாள் தேர்வும் மதியம் 2,30 மணிமுதல் 4,30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் தாளில் புவியமைப்பியல் பட்டப் படிப்பை அடிப்படையாக வைத்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் பொது ஆய்வில் (ஜென்ரல் ஸ்டடீஸ்) பட்டப் படிப்பை அடிப்படையாக வைத்து கேள்விகள் கேட்கப்படும்.

புவியமைப்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களுக்கு 2017 ஜீன் 25ம் தேதி காலை 10 மணி முதல் 1வரை தேர்வு நடை பெறும். இந்தத் தேர்வில் புவியமைப்பியல் முதுகலை பட்டப் படிப்பை அடிப்படையாக வைத்து கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பப் படிவம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 21.03.2017

வங்கி மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி - 23.03.2017

மேலும் தகவல் பெற www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION HAS ANNOUNCED EXAM FOR ASSISTANT GEOLOGIST.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia