5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரகமானது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வழங்கப்படும் நடைமுறை மாற்றப்பட்டதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை "எண்ணும் எழுத்தும்" என்னும் பாடத்திட்ட முறை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!

இவ்வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க குறிப்பிட்ட கால இடைவெளிகளில் 3 கட்ட பருவத் தேர்வுகள் வாயிலாக வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வகையில் நடப்புக் கல்வியாண்டுக்கான 1ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கான மூன்றாம் பருவத்தேர்வு விரைவில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இத்தேர்வு குறித்த புதிய அறிவிப்பை தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரகமானது தற்போது வெளியிட்டுள்ளது.

இதன் படி, இப்பருவத் தேர்வுக்கான வினாத்தாள்களை பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பும், இத்தேர்வை சரியாக நடத்துவதற்கான பொறுப்பும் வட்டாரக் கல்வி அலுவலகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுக்கான வினாத்தாள்களை (BEO) Login மூலமாக பதிவிறக்கம் செய்து மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை அந்தந்த வட்டார வள மையங்களில் உள்ள வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களைக் கொண்டு அச்சிடும் பணியினை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு 38 மாவட்டங்களுக்கு வினாத்தாள்களை அச்சிடும் பணிக்காக ரூ.2,43,60,453 -ஐ அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Primary Education Directorate has issued new orders for 3rd semester Question Paper practice. So, Tamil Nadu Primary Education Directorate will follow the new rules. For more details please login into https://tnschools.gov.in/dms
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+