முதுநிலை மருத்துவ படிப்பு : இரண்டாம் நாள் கலந்தாய்வில் 779 பேர் பங்கேற்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெற்று வரும் கலந்தாய்வின் இரண்டாம் நாளில் 779 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 422 பேருக்கு கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெற்று வரும் கலந்தாய்வின் இரண்டாம் நாளில் 779 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 422 பேருக்கு கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்பு : இரண்டாம் நாள் கலந்தாய்வில் 779 பேர் பங்கேற்பு

தமிழகத்தில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு எம்டி, எம்எஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

இதில், முதல்நாள் நடைபெற்ற கலந்தாய்வில் அரசு கல்லூரிகளில் 283 பேரும், தனியார் கல்லூரிகளில் 7 பேரும் என மொத்தம் 290 பேர் மருத்துவப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக் கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இரண்டாம் நாளான செவ்வாயன்று நடைபெற்ற கலந்தாய்வில் 779 பேர் பங்கேற்றனர்.

இந்த கலந்தாய்வின் முடிவில் அரசு கல்லூரிகளில் 373 பேர், தனியார் கல்லூரிகளில் 49 பேர் என மொத்தம் 422 பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. இந்த கலந்தாய்வானது வரும் வியாழக்கிழமையுடன் கலந்தாய்வு நிறைவடைகிறது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu PG medical, dental counselling second day result
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+