முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெற்று வரும் கலந்தாய்வின் இறுதி நாள் முடிவடைகிறது. கடந்த மூன்று நாள்களில் 877 மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த திங்கள்கிழமை முதல் (ஏப்ரல் 2) தொடங்கியது. தொடர்ந்து, மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கலந்தாய்வின் இறுதி நாளில் 165 இடங்கள் நிரம்பியதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்டிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












