சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் புதிதாக 63 படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான அனுமதியை பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) வழங்கியுள்ளது. நடப்புக் கல்வியாண்டிலிருந்தே இந்த படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். இந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்களை நேற்று முதல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கிவருகிறது.

இத்தகவலை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்தார். 3 மாதங்களாக பல்கலைக்கழகத்தில் இந்த படிப்புகளைத் தொடங்க அனுமதி பெற காத்திருந்ததாகவும், தற்போது அனுமதியை யுஜிசி வழங்கியிருப்பதால் விண்ணப்ப விநியோகம் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இஸ்லாமிய படிப்புகள், போலீஸ் நிர்வாகம், தொல்லியல்துறை, பாதுகாப்பு, குழந்தைகள் உரிமை, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட 63 புதிய படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றனர் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












