தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். படிக்க பொன்னான வாய்ப்பு!!

Posted By:

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(TNOU) பி.எட். படிப்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கம்ப்யூட்டர் யின்ஸ், வணிகம், பொருளியியல் ஆகிய பிரிவுகளில் பி.எட் பயில முடியும். இதற்கான சேர்க்கை 2016ம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். படிக்க பொன்னான வாய்ப்பு!!

இதில் சேர விரும்புபவர்கள் இளநிலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மேலும் ஆசிரியர் டிப்ளமோ பட்டம் படித்தவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான விண்ணப்பங்களை ரூ.500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் அல்லது பல்கலைக்கழக மண்டல மையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். தபால் மூலம் பெற விரும்புபவர்கள் ரூ.550-க்கு கேட்புக் காசோலை அனுப்பி பெறலாம். தபாலை The Registrar, Tamil Nadu Open University, 577 Anna Salai, Saidapet, Chennai-600 015" என்ற முகவரிக்கு அனுப்பலாம். நவம்பர் 30 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் டிசம்பர் 11-ம் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு http://www.tnou.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Tamil Nadu Open University (TNOU), Chennai has invited applications for admission to distance Bachelor of Education (B.Ed) programmes. Admissions are offered in the optional subjects: Tamil/ English/ Mathematics/ Science/ Social Science/ Computer Science/ Commerce/ Economics for the session January 2016. Eligibility Criteria: Candidates should have passed the UG degree examination in 11+1+3 or 10+2+3 stream. Trained In-service teachers with D.T.Ed. in any Government recognised school within Tamil Nadu state are eligible to apply The candidates who have completed a NCTE recognised teacher education programme through face-to-face mode can apply.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia