தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் ஆரம்பம்...!

Posted By:

சென்னை : 2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் தமிழ்நாட்டில் ஆரம்பமானது. விண்ணப்பங்கள் தமிழ் நாட்டில் 22 இடங்களில் வழங்கப்படுகிறது.

2017-2018ஆம் ஆண்டிற்கு தமிழ் நாட்டிலுள்ள அரசு மற்றும் சுயநிதி (தனியார்) மருத்துவம், பல் மருத்துவம் பட்டப்படிப்பிற்கு ஒற்றை சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகின்றன.

அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாகும்.

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் இன்று முதல் ஆரம்பம்...!

மருத்துவம் / பல் மருத்துவம் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பேடுகள் கீழ்க்ண்ட அனைத்து அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பதாரர்களின் மனுவின் பேரில் 27.06.2017 முதல் 07.07.2017 வரை எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை உட்பட) காலை 10..00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 08.07.2017 மாலை 5.00 மணிவரை

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்

விண்ணப்பம் வழங்கப்படும் நாட்கள் - ஜூன் 27 காலை 10 மணி முதல் ஜூலை 7 மாலை 5 மணி வரை வழங்கப்படும்.

விண்ணப்பம் பூர்த்தி செய்து அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி - 08.07.2017 மாலை 5 மணி வரை

1. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.

2. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை - 600001.

3. மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை - 625020.

4. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் - 613004.

5. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600010.

6. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு - 603001.

7. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி - 627011.

8. கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் - 641014.

9. அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, சேலம் - 636030.

10. அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி - 620001.

11. அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி - 628008.

12. அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, ஆசாரிபள்ளம், கன்னியாகுமரி மாவட்டம் - 629201.

13. அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அடுக்கம்பாறை, வேலூர் - 632011.

14. அரசு தேனி மருத்துவக் கல்லூரி, தேனி - 625531.

15. அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி - 701.

16. அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, திருவாரூர் - 610004.

17. அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் - 601.

18. அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, சிவகங்கை - 630561.

19. அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை - 606604.

20. அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் எஸ்டேட், சென்னை - 600002.

21. அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை

22. தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை - 600003.

விண்ணப்பப்படிவங்கள் தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்கம், கீழ்ப்பாக்கம், சென்னை - 10ல் வழங்கப்படமாட்டாது.

இணையதளம் மூலமும் விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இணையதள மூலம் விண்ணப்பிப்பவர்கள் கோட்பு வரைவோலையுடன் இணைத்து அனுப்பவும் அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர்,
தேர்வுக்குழு,
மருத்துவக்கல்வி இயக்கம்,
162, பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம்,
சென்னை - 600010.

English summary
Above article mentioned about medical application details 2017.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia