தமிழகத்தில் வரும் 27, 30ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சுமார் 412 இலவச நீட் பயிற்சி மையங்களில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் நோக்கில் 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், வார இறுதி நாட்கள் உள்ளிட்டு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதனிடையே, வரும் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்களாக அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பணியாற்ற உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆசிரியா்கள் பற்றாக்குறை இருப்பதால் டிசம்பர் 24-ஆம் தேதிமுதல் (இன்று) ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையிலும், இந்த விடுமுறை நாள்களில் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications












