குட்டீஸ் உங்களுக்கு ஸ்கூல்ல பொங்கல்  ரெடி...!

குழந்தைகள் 'ப்ரேக் பாஸ்ட்' ஸ்கிப் பண்ணக்கூடாது என, ஊட்டச்சத்து நிபுணரும், மருத்துவர்களும் அறிவுறுத்துகின்றனர். அதனால பெற்றோர் ஒவ்வொருவரும், தங்களின் குழந்தைகளை 'ப்ரேக் பாஸ்ட்' சாப்பிட வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுவாங்க...

 

இனி அந்த கவலை உங்களுக்கு இல்லை பேரன்ட்ஸ். ஏன் அப்படி சொல்லுறீங்கனு தானே கேட்கிறீங்க...

இனி பள்ளிகளில் மாணவ-மாணவியருக்கு ப்ரேக் பாஸ்ட்

ஏன்னா... தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்த போகிறது.

ப்ரேக் பாஸ்ட் சாப்பிடலனு பீல் பண்ணாதீங்க... அரசே அதை பார்த்துக்க போறாங்க...!

முதல் கட்டம் 1,545 பள்ளிகள்

தமிழகத்தில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.

 

ரூ.33.56 கோடி ஒதுக்கீடு

·முதல் கட்டமாக, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, 33.56 கோடி ரூபாயில் செயல்படுத்த, அரசு அனுமதி வழங்கி உள்ளது.

·'முதல்வரின் காலை உணவு திட்டம்' என்ற பெயரில் இது செயல்படுத்தப்படும்.

·1,545 அரசு பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்தை, நடப்பாண்டில் முதற்கட்டமாக செயல்படுத்த, 33.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

·இத்திட்டத்தை, உள்ளாட்சிகள், அமைப்புகள் வழியே செயல்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

·இத்திட்டம், 33.56 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். கூடுதல் செலவு ஏற்பட்டால், தனியாக முடிவு செய்யப்படும்.

·திட்டச் செயல்பாடு தொடர்பான ஆய்வுகள் அடிப்படையில், வரும் ஆண்டுகளில் திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

·அனைத்து வேலை நாட்களிலும் சிற்றுண்டி வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது, இரண்டு நாட்களாவது, இயன்ற அளவு, அந்தந்த பகுதிகளில் விளையும் சிறுதானியங்களில் சிற்றுண்டி தயார் செய்து வழங்க வேண்டும்.

·இத்திட்டம், மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவு தினமான ஆக., 7ல் துவக்கி வைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இனி பள்ளிகளில் மாணவ-மாணவியருக்கு ப்ரேக் பாஸ்ட்

பிரேக் பாஸ்ட் ரெசிப்பீஸ்

திங்கள் கிழமை

உப்புமா வழங்க வேண்டும். ரவா, சேமியா, அரிசி,
கோதுமை ரவா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்

செவ்வாய் கிழமை

கிச்சடி வழங்க வேண்டும். ரவா, சேமியா, சோளம், கோதுமை ரவா ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் காய்கறி சேர்த்து தயாரிக்கப்படும் கிச்சடி வகை

புதன் கிழமை

ரவா பொங்கல் அல்லது வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார்

வியாழக் கிழமை

உப்புமா வகை

வெள்ளிக் கிழமை

ஏதேனும் ஒரு வகை கிச்சடியுடன், ரவா கேசரி அல்லது சேமியா கேசரி வழங்க வேண்டும்.

ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது, உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கலாம்.

கண்காணிக்க குழுக்கள்

காலை உணவு வழங்கும் திட்டத்தை திறம்பட செயல்படுத்த, சமூக நலன், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம், தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர்கள் அடங்கிய, மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைப்பதற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிக்கோள்கள்

· பள்ளிகளில் மாணவர்கள் வருகையை அதிகரிப்பதுடன், அந்த எண்ணிக்கையை தக்க வைக்க வேண்டும்.

· மாணவ -- மாணவியர் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.

· ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவதுடன், குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டை நீக்க வேண்டும்.

· வேலைக்கு செல்லும் பெண்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.

காமராஜர் ஆட்சியின் போது, தமிழகத்தில் முதல் முதலில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுநாள் வரை செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து, காலை சிற்றுணவு மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் சிறப்பான முறையில், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The program of providing breakfast to the students studying in the first to fifth classes in schools is going to be implemented in Tamil Nadu. 1.14 students will benefit from this scheme.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X