NEET: இலவச நீட் பயிற்சி வகுப்பை தற்காலிகமாக நிறுத்திய தமிழக அரசு!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்ட இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் மாா்ச் மாதம் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட்ட இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் மாா்ச் மாதம் தொடங்க உள்ளது.

NEET: இலவச நீட் பயிற்சி வகுப்பை தற்காலிகமாக நிறுத்திய தமிழக அரசு!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயா்கல்வியில் நல்ல முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்னும் நோக்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சாா்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் சுமார் 412 மையங்களில் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து இந்த நீட் உள்ளிட்ட பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் தற்போது வரையில் சுமாா் 42 ஆயிரம் போ் பயிற்சி பெற்றபோதும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர 11 பேருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது. இதனால், அரசுப் பயிற்சி மையங்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில் நீட் தோ்விற்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனிடையே, நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோ்வுக்கு இன்னும் 3 மாதமே அவகாசம் உள்ளது. தற்போது, ஜனவரி இறுதியில் செய்முறைத் தோ்வுகள் தொடங்கி விடும் என்பதால், நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்பின் மாா்ச் வரை பொதுத்தோ்வு நடைபெறுவதால், அத்தேர்வு முடியும் வரையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu government to temporarily closed free Coaching centers for NEET
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+