நீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்

நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண்பதற்கு தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

நீட் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண முயற்சிக்கப்படும்- முதல்வர்

 

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவகாரம் குறித்து பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார். திங்களன்று நடைபெற்ற பேரவையில் இதுகுறித்து நடந்த விவாதம் வருமாறு:-

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்:-

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்:-

நீட் விலக்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தாருங்கள் என்று மத்திய அரசை சட்டப் பேரவை மூலமாகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருந்தோம். அனைத்துக்கும் மௌனம் சாதித்த பாஜக அரசு இப்பொழுது திடீரென்று உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தமிழக நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன என்ற அறிவிப்பை தெரிவித்துள்ளது. இது தமிழகத்தை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

மசோதாக்களை நிராகரித்தது குறித்த தகவலைக்கூட மாநில சட்டப்பேரவைக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை கண்ணியம் கூட காணாமல் போயிருக்கிறது. மத்திய அரசின் இந்த விநோதமான செயல் மிக மிக கண்டனத்துக்குரியது.

எனவே, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கூடிய மசோதாக்கள் இரண்டுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி இந்த அவையில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

ஒரு மாநில அரசு மத்திய அரசை எதிர்த்து கண்டனத் தீர்மானம் இயற்றுவது என்பது சரியாக இருக்காது. அதேசமயம், இந்தப் பிரச்சனை குறத்தது உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மு.க.ஸ்டாலின்:-
 

மு.க.ஸ்டாலின்:-

மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் போட முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். வற்புறுத்தியாவது ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா?

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

நீட் மசோதா தொடர்பாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும். அப்போதாவது, நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வாதிடாமல் இருந்தால் நல்லது.

சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்:-

சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்:-

தமிழக அரசு அனுப்பிய மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவே கடந்த 2017-இல் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், நிறுத்தி வைத்ததற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் சார்புச் செயலாளரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. எதற்காக நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் தெரியவில்லை.

இந்த மசோதாக்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வலியுறுத்த வாய்ப்புள்ளது. கண்டனத் தீர்மானம் போடுவதால் எந்தப் பயனும் இல்லை.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:-

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:-

கண்டனத் தீர்மானம் இல்லாவிட்டாலும், வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதனால் என்ன பாதிப்பு வந்து விடப்போகிறது?

முதலமைச்சர் பழனிசாமி:-

முதலமைச்சர் பழனிசாமி:-

நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கும்.

மு.க.ஸ்டாலின்:

மு.க.ஸ்டாலின்:

மத்திய அரசை வலியுறுத்தி நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.

இவ்வாறு பேரவையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து விவாதம் நடைபெற்றது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu government to take legal opinion following rejection of NEET Bills
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X