தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புதிய தலைவராக கா. பாலச்சந்திரன் அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது (TNPSC) தமிழக அரசுத் தறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான தேர்வாணையம் ஆகும். இந்த தேர்வாணையத்தின் தலைவராக அருள்மொழி ஐஏஎஸ் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், தற்போது அருள்மொழி ஐஏஎஸ்., பதவிக்காலம் நிறைவு பெறுவதால், டிஎன்பிஎஸ்சி-யின் புதிய தலைவராக கா. பாலச்சந்திரன் அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கா. பாலச்சந்திரன் இதற்கு முன்பு கடந்த 2 ஆண்டுகளாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
For Quick Alerts
For Daily Alerts