வாட்ஸ் அப் எண் வச்சிருக்கீங்களா? இலவச 'கோச்சிங்' போகலாம்...!

ஐ.பி.பி.எஸ்., என அழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) சார்பில் நடைபெறவுள்ள எழுத்தர் (Clerk) போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை, சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவித்துள்ளது.

 

'கிளார்க்' பணிக்கு விண்ணப்பிச்சிருந்தா? நீங்க தனியார் கோச்சிங் சென்டரில் காசை வாரி இறைச்சு படிக்க போகனும்ங்ற அவசியமில்லை. அதை விட, சிறப்பாகவும், இலவசமாகவும் பயிற்சி வழங்க தயாராகவுள்ளது தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டும் மையம்.

கிளார்க் பணி தேர்வர்களுக்கு இலவச கோச்சிங்

தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு (இது முதன்மை எழுத்து தேர்விற்கு அனுமதிக்க மட்டும் நடைபெறும்) முதன்மை எழுத்துத் தேர்வு என, இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது.

 

பொது விழிப்புணர்வு (General Awareness), பிரச்னை தீர்க்கும் ஆற்றல் (Problem Solving ability), காரணங்கானல் (Logical Reasoning), ஆங்கில மொழித்திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றல் (English Language and Comprehension) ஆகிய நான்கு கூறுகளை கொண்டதாக அமையும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை அறிவித்துள்ளது.

கிளார்க் பணி தேர்வர்களுக்கு இலவச கோச்சிங்

படித்து பாருங்க...!

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் (Study Circles) மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக, பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், IBPS- தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 5 முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில், வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

கிளார்க் பணி தேர்வர்களுக்கு இலவச கோச்சிங்

ஆர்வம் இருக்கா....!

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் 9597557913 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு, பெயர் கல்வித் தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

இப்பயிற்சி வகுப்பிற்கு வருகை தரும் தேர்வர்கள், தங்களது IBPS தேர்வுக்கான விண்ணப்ப நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வர வேண்டும்.

இப்பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்க்கான தகுதியும், அனுபவமும் மற்றும் விருப்பமும் உள்ள பாட வல்லுநர்கள் மேற்படி தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம்.

அரசால் அனுமதிக்கப்பட்ட மதிப்பூதியமும் வழங்கப்படும்.

இப்பயிற்சி வகுப்பு தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிய 044-22501032 எண் மற்றும் peeochn@gmail.com மின்னஞ்சல் முகவரி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வர்கள் 9597557913 என்ற வாட்ஸ் அப் (Whatspp) எண்ணிற்கு தங்களது பெயர் கல்வித்தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Bank Staff Selection Board (IBPS) has released a notification for more than six thousand 'Clerk' vacancies in Public Sector Banks. Tamil Nadu Government provides free coaching.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X