தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் விருதுநகர் மாவட்டம் கடந்த ஆண்டை போலவே 97 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
இதேபோல 96.3 சதவீதம் பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டவது இடத்தையும், 96.2 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. 83.35 சதவிகிதத்துடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வை 2602 மாற்றுத் திறனாளி மாணவர்கள் எழுதிய நிலையில், 2110 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்:
| கன்னியாகுமரி | 93.98 |
| நெல்லை | 90.59 |
| தூத்துக்குடி | 92.40 |
| ராமநாதபுரம் | 93.90 |
| சிவகங்கை | 93.18 |
| விருதுநகர் | 94.26 |
| தேனி | 91.82 |
| மதுரை | 85.11 |
| திண்டுக்கல் | 82.33 |
| ஊட்டி | 84.19 |
| திருப்பூர் | 93.45 |
| கோவை | 90.34 |
| ஈரோடு | 93.85 |
| சேலம் | 86.53 |
| நாமக்கல் | 90.85 |
| கிருஷ்ணகிரி | 80.74 |
| தர்மபுரி | 89.19 |
| புதுக்கோட்டை | 85.37 |
| கரூர் | 90.24 |
| அரியலூர் | 79.42 |
| பெரம்பலூர் | 88.67 |
| திருச்சி | 86.87 |
| நாகப்பட்டினம் | 81.03 |
| திருவாரூர் | 78.27 |
| தஞ்சாவூர் | 84.37 |
| புதுச்சேரி | 73.77 |
| விழுப்புரம் | 78.75 |
| கடலூர் | 78.99 |
| திருவண்ணாமலை | 84.16 |
| வேலூர் | 82.70 |
| காஞ்சிபுரம் | 77.04 |
| திருவள்ளூர் | 73.10 |
| சென்னை | 87.65 |
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1 சதவிகித பேரும், மாணவர்கள் 87.7 சதவிகித பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 91.1 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1 சதவிகித குறைவு.
மேலும் பாட வாரியாக, பள்ளி வாரியாக முழுமையான விவரங்களைப் பெற இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












