TN Board Public Exam 2023: தமிழகத்தில், 2022- 23 கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான கால அட்டவணையை, நவ.,7 வெளியிட்டார்.
தேர்வு எப்போது?
10ம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும். 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முயற்சி
எம்.பி.பி.எஸ்., பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி சேர்க்கைக்கு தேவையான மிக முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளுக்கு போதிய கால இடைவெளி இருக்குமாறு அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதாவது, இயற்பியல் பாடத்துக்கு 5 நாட்களும், கணித பாடத்துக்கு 5 நாட்களும், உயிரியியல் பாடத்துக்கு 3 நாட்களும், வேதியியல் பாடத்துக்கு 2 நாட்கள் என, கால இடைவெளி வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று 11ம் வகுப்புக்கும், மிக முக்கிய பாடங்களுக்கு போதிய கால இடைவெளி இருக்குமாறு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பில், கணிதத்துக்கு இரண்டு நாட்களும், அறிவியல் பாடத்துக்கு 4 நாட்களும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்களும் கால இடைவெளி வழங்கப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை:
ஏப்ரல் 6 - மொழித்தாள்
ஏப்ரல் 10 - ஆங்கிலம்
ஏப்ரல் 13- கணிதம்
ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்
ஏப்ரல் 17- அறிவியல்
ஏப்ரல் 20- சமூக அறிவியல்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை
மார்ச் 13 - மொழித்தாள்
மார்ச் 15- ஆங்கிலம்
மார்ச் 17- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி
மார்ச் 21 - இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 27 - கணிதவியல், விலங்கியல், நர்சிங்
மார்ச் 31- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்
ஏப்ரல் 3- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
கொரோனா தொற்றால், கடந்த இரு கல்வியாண்டில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் சரியான நேரத்தில் நடைபெறவில்லை.
தற்போது, பெருந்தொற்று கட்டுக்குள் இருப்பதால், இந்த கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.
ஆகையால், பொது தேர்வையும் சரியான நேரத்தில் நடத்தி முடிக்க திட்டமிட்ட மாநில அரசு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வு அட்டவணை குறித்த சந்தேகங்கள், முழு விவரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்....!