தமிழ்மொழியை விருப்ப பாடமாக ஊடகவியலில் கற்க அனுமதி வழங்கியுள்ளது டில்லி பல்கலைகழகம்

Posted By:

தமிழ் மொழிக்கு அங்கிகாரம்   டில்லி பல்கலைகழகம் வழங்கி   தமிழ்மொழியில்  ஊடக படிப்பினை படிக்க அனுமதி வழங்கியுள்ளது .

 டில்லி பல்கலைகழகத்தில் தமிழ் மொழியையும்   ஊடகவியலில்  கற்கலாம்

டில்லி பல்கலை கழகம் ஊடகவியல் படிப்புக்கு விருப்ப மொழியாக தமிழ் மொழி  சேர்க்க்ப்பட்டுள்ளது . இது குறித்து டில்லி பல்கலைகழகத்தின் அனுமதி குழு தலைவர் மகாராஜ் பண்டிட் அவர்கள் தமிழ் மொழி தென் இந்தியாவின் தொன்மையான மொழியாகும் . தமிழ் மொழி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென் கிழக்கு நாடுகளில் பேசப்படுகிற மொழியாகும் . மேலும் தமிழ் மொழியை  படித்து பேசுவதுடன்  தென் கிழக்கு நாடுகளில் பறந்து விரிந்துள்ளது தமிழ்மொழி. அத்தகைய மொழியை படிக்கும் பொழுது எளிதாக தென் கிழக்கு நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் வங்க மொழியையும் அங்கிகரித்து விருப்ப பாடமாக படிக்க அனுமது வழங்கியது டெல்லி பல்கலைகழகம் .

 டில்லி பல்கலைகழகத்தில் தமிழ் மொழியையும்   ஊடகவியலில்  கற்கலாம்

தமிழ் மொழி தொன்மையானது சங்ககாலம் லெமூரியா கண்டம் முதல் தொன்மையான வரலாறு கொண்டது தமிழ் மொழி. தமிழ் மொழியின் தொன்மைக்கும் அதன் பெருமைக்கும் என்றும் தனித்தன்மையுண்டு . அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழுக்கு டில்லி பல்கலைகழகம் மேலும் பெருமை சேர்த்து கௌரவப்படுத்தியுள்ளது . தமிழ் மொழிக் கல்வியை பேணி காத்து இன்று வரை இந்தி மொழி திணிப்பையும் எதிர்த்து வந்த தமிழ் நாட்டின் மொழி பற்றினையும் அதன் விரிவாக்கத்தையும் உலகம் அறிந்து வருகின்றன .
டெல்லி பல்கலைகழகம் அதனை நன்றாக அறிந்து வைத்துள்ளது . சங்கம் வளர்த்த தமிழ் என்றும் பதினாறு கொண்ட தமிழ் எல்லார்க்கும் தெவிட்டாத செந்தமிழ் என்றும் மங்கா தமிழ் . அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழை அங்கிகரித்து கௌரவப்படுத்தும் நடவடிக்கைகள் வேலை வாய்ப்புக்கு வழிவகுப்பதுடன் மொழிக்கான எல்லை மேலும் விரிவடையும் மற்ற மொழித்தவர்களும் தமிழை கற்கும் வாய்ப்பு  கிடைக்கும் 

English summary
here article mentioned about delhi university granted permission to study journalism in tamil
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia