சிண்டிகேட் வங்கியில் காத்திருக்கும் அட்டெண்டர் பணியிடங்கள்

Posted By:

சென்னை: பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் அட்டெண்டர் மற்றும் ஸ்வீப்பர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

கர்நாடக மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கியில் மொத்தம் 145 கடைநிலை ஊழியர்(அட்டெண்டர்) பணியிடங்கள் காலியாகவுள்ளன. மேலும் பகுதி நேர ஸ்வீப்பர் பணியிடங்களும் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

சிண்டிகேட் வங்கியில் காத்திருக்கும் அட்டெண்டர் பணியிடங்கள்

145 அட்டெண்டர், 166 ஸ்வீப்பர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த அட்டெண்டர் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுானது. 12-ம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

இதேபோல ஸ்வீப்பர் பணியிடங்களுக்கு 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை.

வயது 18 முதல் 26-க்குள் இருக்கவேண்டும். ஓபிசி, எஸ்டி, எஸ்சி பிரிவினருக்கு வயதுச் சலுகை உண்டு.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் The Deputy General Manager, Syndicate Bank, Regional Office என்ற முகவரிக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.syndicatebank.in என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Syndicate Bank invited application from eligible candidates for 31 posts of Attender and Part Time Sweeper. The eligible candidates can send their application in the given prescribed format on or before 30 November 2015.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia