சிண்டிகேட் வங்கியில் காத்திருக்கும் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!!

Posted By:

சென்னை: சிண்டிகேட் வங்கியில் 115 சிறப்பு அதிாரி பணியிடங்கள் காத்திருக்கின்றன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் டிசம்பர் 10-ம் தேதிக்குள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

உதவி பொது மேலாளர்(பொருளாதார நிபுணர்), உதவிப் பொது மேலாளர்(புள்ளியியல்), உதவிப் பொது மேலாளர் (கம்பெனி செகரட்டரி), மேலாளர் (சட்டம்), மேலாளர்(சிஏ), தொழில்நுட்ப அதிகாரி(சிவில்), தொழில்நுட்ப அதிகாரி (எலக்ட்ரிக்கல்) என மொத்தம் 115 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

சிண்டிகேட் வங்கியில் காத்திருக்கும் சிறப்பு அதிகாரி பணியிடங்கள்!!

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும். டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் கிடைக்ுமாறு செ்யவேண்டும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.600(பொது, ஓபிசி பிரிவினர்) வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

கல்வித் தகுதி, வயதுத் தகுதி போன்ற விவரங்களை சிண்டிகேட் வங்கியின் இணையதளமான http://www.syndicatebank.in/english/home.aspx-ல் காணலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia