அப்துல் கலாம் பெயரில் உதவித்தொகை: சிட்னி பல்கலை. வழங்குகிறது!!

Posted By:

சென்னை: மறைந்த விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் பெயரில் பட்டமேல்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகையை ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது.

சிட்னி பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.ஜி. டிகிரி மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். 2016-ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் இந்த உதவித்தொகையைப் பெற முடியும்.

அப்துல் கலாம் பெயரில் உதவித்தொகை: சிட்னி பல்கலை. வழங்குகிறது!!

இந்த உதவித்தொகையைப் பெறும் மாணவர்கள் தங்களது பயிற்றுக் கட்டணத்தில் 50 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும்

இந்த உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். முழு நேர படிப்பை எடுத்து படிப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பத்தில் பி.ஜி.டிகிரி பட்டமேற்படிப்பில் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
பட்டப்படிப்பில் அவர்கள் 75 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்களைப் பெற்றிருக்கவேண்டும். விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://sydney.edu.au/engineering/scholarships/postgraduate/future-coursework.shtml-ல் சென்று விவரங்களைப் பெறலாம்.

English summary
University of Sydney, Australia has invited applications for Dr Abdul Kalam International PG Scholarships 2016 for students pursuing full-time masters by coursework programme in the Faculty of Engineering and Information Technologies at the University of Sydney. Scholarships are offered for the session 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia