விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வல்லபபாய் படேல் அகாடமியில் வேலை!!

Posted By:

சென்னை: சர்தார் வல்லபபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியில்(எஸ்விபிஎன்பிஏ) விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வேலை காத்திருக்கிறது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு வல்லபபாய் படேல் அகாடமியில் வேலை!!

மொத்தம் 2 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்த வேலையில் சேர விரும்புபவர்கள் இந்திய விளையாட்டு ஆணையம் நடத்தும் அகாடமியில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்கவேண்டும் அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து டிப்ளமோ படிப்பை முடித்திருக்கவேண்டும்.

வயது 50-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் the Deputy Director (Estt.), S.V.P. National Police Academy, Hyderabad -500052 என்ற முகவரிக்கு ஜனவரி 20-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சிஅளிக்க உதவும் இந்திய தேசிய இன்ஸ்டிடியூட்டாகும் சர்தார் வல்லபபா் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியாகும். இங்கு பயிற்சி பெற்ற பின்னரே ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு http://www.svpnpa.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Sardar Vallabhbhai Patel National Police Academy (SVPNPA) invited applications for recruitment to the posts of Sports Coach. The candidates eligible for the post can apply through prescribed format on or before 20 January 2016.Eligible candidates can apply to the post through the prescribed format and send the applications along with other necessary documents to: the Deputy Director (Estt.), S.V.P. National Police Academy, Hyderabad -500052 so as to reach on or before 20 January 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia