சுஷ்மா சுவராஜ் கல்வி மற்றும் அரசியல் பயணம்.. ஓர் பார்வை!

சுஷ்மா சுவராஜ், அம்பாலா கன்டோன்மென்ட் சனாதன் தர்மா கல்லூரியில் பட்டம் பெற்றவர். அதோடு, அரசியல் அறிவியல் துறையிலும், சமஸ்கிருதத்திலும் இளங்கலை பட்டம் பெற்றவர்.

By Saba

மறைந்த சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். மேலும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சராகவும் இவர் செயல்பட்டுள்ளார். ஆகஸ்ட் 6ம் தேதியன்று உடல்நலக் குறைவின் காரணமாக மறைந்த இவரின் கல்வி மற்றும் அரசியல் பயணம் குறித்து ஓர் பார்வை.

சுஷ்மா சுவராஜ் கல்வி மற்றும் அரசியல் பயணம்.. ஓர் பார்வை!

சுஷ்மா சுவராஜ் அவர்களின் கல்விப் பின்னனி

சுஷ்மா சுவராஜ், அம்பாலா கன்டோன்மென்ட் சனாதன் தர்மா கல்லூரியில் பட்டம் பெற்றவர். அதோடு, அரசியல் அறிவியல் துறையிலும், சமஸ்கிருதத்திலும் இளங்கலை பட்டம் பெற்றவர்.

சண்டிகரில் செயல்பட்டு வரும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது சட்டத் துறை படிப்பை மேற்கொண்ட அவர், 1970 ஆம் ஆண்டில், அம்பாலா கன்டோன்மென்ட் எஸ்டி கல்லூரியில் சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்றார்.

மேலும், எஸ்.டி கல்லூரியில் என்.சி.சி-யின் சிறந்த கேடட் பட்டத்தையும் சுஷ்மா தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக, ஹரியானாவின் மொழித் துறையால் நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியில் சிறந்த இந்தி பேச்சாளர் விருதையும் பெற்றுள்ளார்.

தொடர்ந்து தனது கல்லூரி காலங்களில் பல்வேறு விருதுகளை குவித்து வந்த சுஷ்மா,

ஏ.சி பாலி நினைவு அறிவிப்பு போட்டியில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் இந்தி மொழியில் சிறந்த பேச்சாளராக அறிவிக்கப்பட்டு அங்குள்ள பல்கலைக்கழக விருதை தன்வசமாக்கினார்.

சுஷ்மா சுவராஜ் தனது பாடநெறி நடவடிக்கைகளில் சிறந்தவர். விவாதங்கள், சொல்லாட்சி போட்டிகள், பேச்சுப் போட்டி, நாடகங்கள் மற்றும் பிற கலாச்சார நடவடிக்கைகளில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். கவிதை மற்றும் இலக்கியத்தில் அதீத ஆர்வமுள்ள வாசகர் என்பதைத் தவிர, கிளாசிக்கல் இசை, கவிதை, நுண்கலைகள் மற்றும் நாடகம் ஆகியவற்றிலும் ஆர்வம் காட்டியவர் சுஷ்மா சுவராஜ்.

அரசியல் பயணம்

கல்லூரி படிப்பை முடித்த சுஷ்மா சுவராஜ், 1973 ல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார் சுஷ்மா சுவராஜ்.

மே 2008 முதல் 2009 வரை மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினராக செயல்பட்டார்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார்.

ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கல்வி மற்றும் வேலைக்காக சென்ற மாணவர்கள் எதிர்கொண்டு வதந்த பிரச்சனைகளுக்கு அப்போது பலத்த குரல் எழுப்பி மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்தது இவரது சாதனைகளில் ஓர் சிறிய அங்கம்.

நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998-ம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பதவி ஏற்றார். மேலும் அவர் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஆகஸ்ட் 6) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சுஷ்மா சுவராஜ் காலமானார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sushma Swaraj's educational background: From a double bachelor's in Pol Sc and Sanskrit to an LLB
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+