நில அளவர், உதவி வரைவாளர் பணிக்கு ஆளெடுக்கிறாங்க!

Posted By:

சென்னை: தமிழ்நாடு நகர் ஊரமைப்பு துறையில் காலியாக உள்ள நில அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

மொத்தம் 98 நில அளவர், உதவி வரைவாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தப் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது தமிழக நகர் ஊரமைப்புத் துறை.

சர்வேயர் கம் அசிஸ்டெண்ட் டிராப்ட்ஸ்மேன் பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் கடந்த ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும்.

மேலும் டிராப்ட்ஸ்மேன்(சிவில்) அல்லது சர்வேயர் பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இப்பணிக்கு பொருந்தும் என்பதால் மாணவர்களள் தயக்கமின்றி விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அதற்கான சான்றிதழை விண்ணப்பம் செய்யும்போது காண்பிக்க வேண்டும்.

அதற்கான மாதிரி படிவத்தை www.dtcpexam.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பணிக்கான சம்பளம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள் என்ற அடிப்படையில் இருக்கும்..

எழுத்துத் தேர்வு, படம் வரையும் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்பபடையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை , கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தை Director of Town and Country Planing என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்புதல் நலம்.

விண்ணப்பிக்க விரும்பவோர் www.dtcpexam.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் படிவத்தை நிரப்பி பின் அதனை நகல் எடுத்து அதனுடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஐடிஐ சான்றிதழ், தமிழ் வழியில் படித்தவராக இருந்தால் அதற்கான சான்றிதழ், விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி, வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களின் நகல்களிலும் விண்ணப்பதாரரின் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப்படிவ நகலை Director of Town and Country Planing, 4th Floor, P.T.Lee Chengalvaraya Naiker Building, 807, Anna salai, Chennai - 02 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப்படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்றடைய ஜூலை 27 கடைசி நாளாகும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களைப் பெறுவதற்கு www.dtcpexam.com என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Surveyor and Draughtsman will be recruited in TN Government shortly through written exams. For more details logon to www.dtcpexam.com.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia