டிகிரி முடித்தவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வேலை!

Posted By:

சென்னை : சுப்ரீம் கோர்ட்டில் இளநிலை உதவியாளர் பணிக்கு 57 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது. குரூப்-பி தரத்திலான இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் காலி இடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 10.03.2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு -
1.12.2016ம் தேதிக்குள் 27 வயது பூர்த்தியானவர்களாக இருக்க வேண்டும்.
எஸ்சி , எஸ்டி, ஓபிசி, பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள், சுதத்திர போராட்ட வீரர்கள் ஆகியோர்களுக்கு வயது வரம்வு தளர்வு அனுமதிக்கப்படும்.

டிகிரி முடித்தவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வேலை!

கல்வித் தகுதி -
அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், தட்டச்சு மற்றும் கணிணி இயக்கும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் -
பொதுப் பிரிவினர் rs. 300/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
எஸ்சி , எஸ்டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் rs. 150/- விண்ணப்பக் கட்டணம் செலுத்தினால் போதும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.03.2017.

மேலும் தகவல்களுக்கு www.sci.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

English summary
supreme court of india recruitment 2017 Apply For 57 Junior Assistant (group -B) Posts At supreme court.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia