நாளைய ரிசல்டில் பெயிலானா கவலை வேணாம்... ஜூனில் துணைத் தேர்வு இருக்கு!

Posted By:

சென்னை: மார்ச் 2015-ல் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

நாளைய ரிசல்டில் பெயிலானா கவலை வேணாம்... ஜூனில் துணைத் தேர்வு இருக்கு!

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தாங்கள் தேர்வெழுத விரும்பும் பாடங்களுக்கு உரிய தேர்வு கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது.

தேர்வு கட்டணமும், செலுத்தும் முறையும்..

மார்ச் 2015, பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத அல்லது வருகை புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வு கட்டணமும், அதனுடன் இதர கட்டணமாக 35 ரூபாயும், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பணமாக செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணம் தவிர ரூ.50 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

English summary
The department of Examinations announced supplementary examinations for students who failed in plus two exams.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia