கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகளுக்கு 21ம் தேதிக்கு மேல் லீவு.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Posted By:

சென்னை : ஏப்ரல் 21ம் தேதியில் இருந்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதன் பிறகு வகுப்புக்கள் நடத்தப்படும் பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு கோடை விடுமுறையை முன்கூட்டியே விட கல்வித்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர்.

கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகளுக்கு 21ம் தேதிக்கு மேல் லீவு.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கோடை வெயில் பயங்கரமாக உள்ளதால் பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ல் இருந்து விடுமுறை வழங்க தமிழ அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு வகுப்புக்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஏப்ரல் 21ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டு பின்பு கோடை விடுமுறை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆண்டுக்கு 220 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஏப்ரல் 29 வரை பள்ளிகளை நடத்த, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் அவர்களுக்கும் ஏப்ரல் 21ம் தேதிக்கு மேல் விடுமுறை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21ல் இருந்து 30ம் தேதிவரை உள்ள தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

English summary
Summer vacation (also called summer holiday or summer break) is a school holiday in summer between school years and the longest break in the school year. summer holidays will be strat April 21 for all students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia