மண்டையை உரிக்கும் வெயில்.. அஞ்சாப்பு வரைக்கும் பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு பாஸ்!

Posted By:

சென்னை : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு. 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிந்தது. மற்ற மாணவர்களுக்கு இந்த மாதக் கடைசியில் இருந்து விடுமுறை ஆரம்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயில் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் நலனில் அக்கறைக் கொண்டு கோடை விடுமுறையை முன்கூட்டியே விட கல்வித்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர்.

கோடைக் காலம் என்பதால் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காணப்படுகிறது. மேலும் வர்தா புயலால் பல பள்ளி வளாகங்களில் உள்ள மரங்களும் வேரோடு
சாய்ந்துக் காணப்படுவதால் பல இடங்கள் வெட்டவெளியாக உள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு வரைப் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஏப்ரல் 1ல் இருந்தே கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது.

தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வுகளை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஏப்ரல் 14ல் இருந்து கோடை விடுமுறை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள்

அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ஏப்ரல் 21ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டு பின்பு கோடை விடுமுறை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஆண்டுக்கு 220 நாட்கள் வேலை நாட்களாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஏப்ரல் 29 வரை பள்ளிகளை நடத்த, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கிராமப்புற மாணவர்கள்

பெரும்பாலான தொடக்கப்பள்ளிகள் கிராமத்தில் காணப்படுகிறது. கிராம மாணவர்கள் வெகு தூரம் பயணித்து கல்விக் கற்க வேண்டிய சூலுல் நிலவுவதால் வெயின் தாக்கத்தால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கோடைக்காலம் என்பதால் பல கிராமங்களில் ஆறு, குளம், குட்டை, ஏரி ஆகியவற்றில் நீர் வரத்து குறைந்து காணப்படும். அதனால் குடிநீர்த் தட்டுப்பாடும் அதிகம் ஏற்படும்.

தொடக்கப்பள்ளிகளுக்கு

அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, போக்குவரத்து வசதிகள் கிராமப்புறங்களில் குறைவாகக் காணப்படுவதால் கோடைக் காலம் என்பது கிராமப்புற மாணவர்களுக்கு கடினமானதாக அமைகிறது. கிராமப்புற தொடக்கப்பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்தே லீவு விடுவது சிறந்ததாகும்.

சம்மர் லீவு

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயலர் பேட்ரிக் ரைமண்ட் கோடை வெயில் காரணத்தால் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு முன்கூட்டியே லீவு விடுவதைப் பற்றி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

English summary
Summer vacation (also called summer holiday or summer break) is a school holiday in summer between school years and the longest break in the school year. Students and instructors are off school typically between 6 and 14 weeks, depending on the country and district.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia