சென்னை : பள்ளி விடுமுறை என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதும், உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், கிராமத்தில் உள்ள பாட்டி தாத்தாவைப் பார்க்கச் செல்வதுமாய் பிஸியாக இருக்கின்றனர்.
பாட்டி தாத்தாவுக்கு எப்ப பள்ளி விடுமுறை வரும் பேரன் பேத்திகளைப் பார்ப்போம் என்ற ஆவல் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும்.
விடுமுறை என்றால் குழந்தைகளுக்கும் ஒரே குதுகலம்தான். பெற்றோர்களோடு வெளியே செல்லாம். பார்க் பீச், ரெஸ்ட்டாரன்ட், ஸாப்பிங் , உறவினர் வீடு என பல இடங்களுக்கு செல்லாம் என்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஜாலியான சம்மர் லீவு
முன்பெல்லாம் சம்மர் லீவுனா ஆறு குளம், ஏரிக்கெல்லாம் ஃபுல் வோர்க்கிங் டேதான். தென்னந்தோப்பு, மாந்தோப்பு, மோட்டர்செட் என்றெல்லாம் ஜாலியாக பொழுதைக் கழிப்பதற்காகவே பாட்டி வீட்டிற்குச் செல்வோம். இப்போது சம்மர் லீவு கூட கைக்குள்ள அடங்கி விடுகின்ற காலம் இது.

பாட்டி சமையல்
பாட்டி கைப்பக்குவம் அம்மா கைப்பக்குவத்தைவிட ஒரு படி கூட இருக்கும். அதனால் நல்ல சாப்பிட்டு ஜாலியா ஊரை சுத்திப் பார்த்துட்டு லீவைக் கழிப்போம். பாட்டி வீட்டிற்கு என்றாலே படு குஷியாக இருக்கும். பாட்டியோட அன்பான உபசரிப்பு அக்கறையான வார்த்தைகள் நம்மை சந்தோசப்படுத்தும். பாட்டி வீட்டிற்கு அத்தை பொண்ணு மாமா பையன் சித்தி பொண்ணு, பையன் அத்தனை உறவுகளும் வந்து இருப்பாங்க அவங்க எல்லாரோடும் சேர்ந்து விடையாடியது அந்தக் காலம்.

அத்தை மாமா வீடு
உறவினர் வீடுகளுக்குச் சென்று சொந்த பந்தங்களை பார்த்துப் பேசி உறவை வளர்த்து ஆனந்தப்பட்டது அந்த காலம். ஆனால் இந்தக் காலத்தில் வருடத்திற்கு ஒரு முறைதான் அம்மா பாட்டி வீட்டிற்குச் செல்கின்றவர் நிறைய பேர் இருக்கின்றனர். அப்போது அம்மாவே முன் வந்து இதுதான் உன்னுடைய மாமா பொண்ணு, பையன் அப்படினு அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. முன்பெல்லாம் லீவு விட்டாலே அத்தை வீட்டுக்கு மாமா வீட்டுக்கு ஓடிருவோம். ஆனால் இப்போ அப்படி இல்ல.

இன்றைய பாட்டி வீடு
இன்றைய பாட்டி வீட்டில் அத்தை, சித்தி, பெரியம்மா, அக்கா, அம்மா, அண்ணன், தம்பி தங்கச்சி, மாமா பொண்ணு, அத்தை பையன் எல்லோரும் இருக்காங்க. ஆனால் சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை மாறிவிட்டனர். உலகமே கைக்குள் அடங்கிவிட்டது போன்ற விஞ்ஞான வளர்ச்சி பாசத்தில் இருந்து நம்மை பல தூர மைல்கள் இழுத்துச் சென்று விடுகிறது எனபதைப் நீங்க இதை பார்த்தாலே நல்லா புரிஞ்சுக்குவீங்கனு நினைக்கிறேன்.