வெயிலு வந்தாலும் வந்துச்சு.. தடுக்கி விழுகின்ற இடமெல்லாம் சம்மர் கிளாசுதான் பாஸு!

Posted By:

சென்னை : மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பமானது. இந்த கோடை விடுமுறையைப் பயன்படுத்தி பல பேர் சம்மர் வகுப்புகளை நடத்தி அதன் மூலம் நல்ல வசூல் பார்த்துறாங்க.

கோடை விடுமுறை சிறுவர் சிறுமியருக்கு 2 மாதக்காலம் என்பதால் அவர்கள் வீட்டில் செய்யும் குறும்புகளை பெற்றோர்கள் சமாளிப்பதற்காக சம்மர் கிளாஸ்ஸில் போய் விட்டாருங்க.

சென்னை போன்ற பெரும் நகரங்களில் பெரும்பாலும் தாய், தந்தை இருவருமே வேலைக்குச் செல்லுவதால் வீட்டில் இருக்கும் பெரியவர்களால் பிள்ளைகளை நாள் முழுவதும சமாளிக்க முடியாது என்பதற்காக நிறைய பெற்றோர்கள் சம்மர் கிளாஸ்ஸில் சேர்த்து விடுகிறார்கள்.

சம்மர் கிளாஸ்

சம்மர் கிளாஸ் நடத்துகிறவர்களும் இதுதான் சாக்கு என்று மூவாயிரம் ஐயாயிரம் என சம்மர் கிளாசுக்கு பெற்றோர்களிடமிருந்து ஒரு கணிசமான தொகையை வசூல் செய்துவிடுகிறார்கள்.
சம்மர் வகுப்பில் பாட்டு, டான்ஸ், செஸ், கேரம்போர்டு, டிராய்ங் போன்ற பல வகுப்புகளை நடத்தி மாணவர்களை இழுக்கின்றனர்.

பெற்றோர்களும் வீட்டில் இருந்து குறும்பு செய்வதை விட சம்மர் கிளாசுக்கு அனுப்பி விடுவது என முடிவு செய்து அனுப்பி விடுறாங்க. தனியார் சம்மர் கிளாஸ் நடத்துபவர்கள் அவர்கள் விருப்பம் போல கட்டணத் தொகையை நிர்ணயிக்கின்றனர்.

சம்மர் வகுப்பு நன்மைகள்

சம்மர் கிளாஸ் என்றாலே நமக்கு இரண்டு விதமாக சிந்திக்க தோனும்.

சில சம்மர் கிளாசுல காசு மட்டும் தான் குறியாக காணப்படுகிறது. அதனால் பெற்றோர்கள் ஏமாந்து போகிறார்கள். ஆனால் சில சம்மர் வகுப்புகளில் வாங்கும் காசுக்கு ஏற்ப பிள்ளைகளுக்கு பாட்டு, நடனம், டிராய்ங், இசைவகுப்புகள்,செஸ், என பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கின்றனர். பிள்ளைகள் ஒருவரோடு ஒருவர் பழகுவதற்கும் நல்ல நட்புறவுகளை அமைத்துக் கொள்வதற்கும் பாலமாக அமைகிறது.

 

கற்றுக் கொள்ள வாய்ப்புதான்

நல்ல பாட்டு, டான்ஸ், குட்டிப்பிள்ளைகளை ஈர்க்கும் கதைகள், குழு நடனம், நல்ல பழக்கவழக்கங்கள், போன்றவைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. சம்மர் வகுப்பு முடியும் நாட்களில் கலை நிகழ்ச்சிகள் போன்றவைகளை நடத்துகின்றனர். மாணவர் அதில் தங்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி மகிழ்ச்சியடைகிறார்கள். பெற்றோர்களும் அதில் மனமகிழ்ச்சி அடைகின்றனர். சம்மர் வகுப்பிற்கான சான்றிதழ்களும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

சம்மர் வகுப்பு கஷ்டங்கள்

சில சம்மர் கிளாஸ் நடத்துபவர்கள் பணத்தை மட்டுமே குறியாக வைக்கின்றனர். ஒரு மணி நேரம் வகுப்பு என்றால் அரை மணி நேரம் நடத்தி வீட்டுக்கு அனுப்பி விடுகிற சம்மர் கிளாசும் இருக்கதான் செய்கிறது. டிராயிங், நடனம், பாட்டு, இசை வகுப்புகள், செஸ், என எல்லாமே கத்துதருகிறோம் என எல்லாமே நாங்க கத்துதருவோம் என அட்ராக்சனாக பேசி இழுத்து விடுவார்கள்.

உள்ளே போனால்தான் தெரியும்

எல்லா வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் என சொல்வார்கள் ஆனால் பின்பு பார்த்தால் எல்லா வகுப்புக்கும் ஒரே நபரை வைத்தே நடத்திவிடுவார்கள். நாங்கள் எதிர்ப்பார்த்த மாதிரி ஸ்டுடண்ஸ் சேரல அதனாலதான் என சொல்லி மழுப்பிவிடுவார்கள். வகுப்பு ஆரம்பித்த பிறகு அரை மணி நேரம் கழித்துதான் அதனை நடத்துபவர் வருவார். ஆனால் கரைக்டான நேரத்திற்கு முடித்து விட்டு சென்று விடுவார். பின்பு அதற்கான சான்றிதழும் எதுவும் வழங்கமாலேயே சம்மர் வகுப்புகளை முடித்து விடுகின்றவர்களும் உள்ளனர்.

பெற்றோர்களே உஷார்

குழந்தைகள் வீட்டில் இருப்பதால் மிகவும் சேட்டை பண்ணுகிறார்கள் அவர்களை சமாளிப்பது கடினமானதாக இருக்கிறது என்று எண்ணி பல பெற்றோர்களும் சம்மர் வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள். நல்லது தான். ஆனால் நல்ல சம்மர் கிளாஸ்தானா வாங்குற காசுக்கு நல்ல கிளாஸ் எடுக்கிறாங்களா அது குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவியாக உள்ளதா என யோசித்து சேருங்கள். பின்பு சம்மர் வகுப்பில் சேர்த்த பிறகு நல்லாவே சொல்லி தரமாட்டுக்காங்க காசு வீணா பேச்சேனு புலம்பக் கூடாது. சேர்க்கும் முன்பே நல்ல விசாரிச்சு பிள்ளைகளுக்கு பிரயோஜனமாக இருக்குமா என பார்த்து சேர்க்க வேண்டும்.

English summary
Many more summer classes are there in the summer time. Include your children well and visit you.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia