மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர

நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் (முனைவர் படிப்பு) சேரலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.

கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர பிஎச்.டி. ஆய்வுப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் நெட் (தேசிய தகுதி தேர்வு), செட் (மாநில தகுதி தேர்வு) ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும். இந்த பிஎச்.டி. ஆய்வுப்படிப்பில் சேர்வதற்கு முதுகலை பட்டம் அவசியம் என்ற விதிகள் இருந்தன.

இந்நிலையில் 'நெட்' தேர்வு எழுதுவதற்கும் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், 4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு(யுஜிசி) தற்போது தளர்த்தி உள்ளது.

மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர

இதனால் 4 ஆண்டு பயிலும் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் நேரடியாக பிஎச்.டி. (முனைவர்) படிப்பில் சேர்து பயில முடியும்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார்

றியதாவது:

4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேர்வதற்குரிய வகையில் தற்போது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இவர்கள் 'நெட்' தேர்வு ம்எழுதலாம். அதே நேரத்தில் அவர்கள் படித்த 4 ஆண்டு படிப்பில் அவர்கள் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாக வந்துள்ளது.
'கிரேடு' முறையாக இருந்தால், 75 சதவீத மதிப்பெண்களுக்கு சமமான 'கிரேடை' அந்த மாணவ, மாணவிகள் பெற்றிருக்க வேண்டும்.

4 ஆண்டு பட்டப்படிப்பில் அவர்கள் என்ன பாடம் படித்து இருந்தாலும், பிஎச்.டி. படிப்பில் தங்களுக்கு விருப்பமான பாடத்தை எடுக்க மாணவச் செல்வங்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர் (கிரீமி லேயர் அல்லாத பிரிவினர்), மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினர் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வும் இந்தப் படிப்பில் சேர்வதற்கு உண்டு இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிவிப்பால் மாணவச் செல்வங்கள் குஷியடைந்துள்ளனர். 4 ஆண்டு படிப்பு படித்து விட்டு அவர்கள் நேரடியாக பிஎச்.டி. சேர முடியும் என்பதால் அவர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Students with 4-year undergraduate degrees can now directly appear for National Eligibility Test (NET) and pursue PhD, University Grants Commission (UGC) Chairman Jagadesh Kumar informed on Sunday. For pursuing PhD with or without a Junior Research Fellowship (JRF), the students with 4-year undergraduate degrees need a minimum of 75 per cent aggregate marks or an equivalent grade.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+