டெல்லி பல்கலை.யில் புதுமை...!! இன்டர்நெட் மூலம் இனி சான்றிதழ் பெறலாம்...!!

Posted By:

டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்டர்நெட் மூலம் மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்றிதழ்கள் வழங்கும் முறை ஜூலை 1-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்கான அறிவிப்பை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து பல்கலை.யின் தேர்வுகள் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து மதிப்பெண், இடம் பெயர்வு, பட்டச் சான்றிதழ்கள் பெறுவது இதுவரை ஒரு கடினமான நடைமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில், இது போன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் மாணவர்கள் சான்றிதழ்களைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் தங்களது பட்டச் சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ், இடம் பெயர்வு சான்றிதழ்கள், சான்றளிப்புகள், எழுத்துப் படிகள் ஆகியவற்றை பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும் என்றார் அவர்.

இந்த நடைமுறையின் மூலம் இந்தியாவிலேயே இத்தகைய வசதியை ஏற்படுத்திய முதல் பல்கலைக்கழகமாக டெல்லி பல்கலைக்கழகம் அமையும்.

English summary
Hereafter students will get Delhi University certificates from internet. This plan will be launched on July 1, Delhi university officials said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia