பொதுத் தேர்வில் பெற்றி பெறவில்லையா கவலைப்படாதீங்க.. தைரியமாக உடனே மறுத்தேர்வுக்கு விண்ணப்பியுங்கள்!

இன்று காலை 10 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் 70க்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

சென்னை : தமிழகத்தில் இன்று பிளஸ்2 முடிவுகள் வெளியிடப்பட்டது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

பிளஸ்2 பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 31ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இதில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் 0.7% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மேலும் 7.9% மாணவ மாணவியர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனே மறுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு வழிவகை செய்துள்ளது.

பொதுத் தேர்வில் பெற்றி பெறவில்லையா கவலைப்படாதீங்க.. தைரியமாக உடனே மறுத்தேர்வுக்கு விண்ணப்பியுங்கள்!

தேர்ச்சி பெறாத மாணவ மாணவியர்கள் உளவியல் ஆலோசனைப் பெற 104 என்ற எண்ணுக்கு போன் செய்து தக்க ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிறப்புத் தேர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஒரு பாடத்தில் மட்டும தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன் மாதத்தில் உடனே தேர்வினை எழுதி தேர்ச்சிப் பெற்று இந்த வருடமே கல்லூரியில் சேர்ந்து விடலாம். அக்டோபர் மாதம் மறுத் தேர்வுக்கு அப்ளை செய்பவர்கள் இந்த வருடத்தை வீணாக்காமல் கம்ப்யூட்டர் கோர்ஸ், டைப் ரைட்டிங், போன்ற பயனுள்ள வகுப்புகளில் சேர்ந்துப் படித்து பயன்பெறலாம்.

மேலும் தேர்ச்சி பெறாத மாணவ மாணவியர்கள் தங்கள் தோல்வியினை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தோல்வியே வெற்றிக்கு முதல்படி என எடுத்துக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். இன்றைய தோல்வியாளர்கள் நாளைய வெற்றியாளர்கள்.

தேர்ச்சி பெறாதற்கு அவர்கள் குடும்பச்சூழல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு போன்றவைகள் காரணமாக இருக்கலாம். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல் தொடந்து முயற்சியுங்கள் வெற்றியை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Plus-2 exam results released at 10 am this morning. Students who have not passed may immediately apply for a review.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+