+2 மாணவர்களே.. ஜாலியா போங்க.. ஜம்முன்னு பரீட்சை எழுதிட்டு வாங்க!

Posted By:

சென்னை : நாளை 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை தமிழகம் முழுவதும் ஒன்பதரை லட்சம் மாணவ மாணவியர்கள் எழுத உள்ளார்கள். அதற்காக 2427 தேர்வு மையைங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுத் தேர்வை மேற்கொள்ளவிருக்கும் மாணவர்கள் எந்த பதட்டமும் இல்லாமல் பரீட்சை எழுதத் தேவையான சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1 மாணவர்கள் தேர்வுநாளில் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்று விட வேண்டும். கடைசி நேரத்தில் சென்றால் அதுவே அதிகப் பதட்டத்தை ஏற்படுத்தி விடும். எனவே நேரம் தவறாமல் இருத்தல் மிகவும் முக்கியமானதாகும்.

+2 மாணவர்களே.. ஜாலியா போங்க.. ஜம்முன்னு பரீட்சை எழுதிட்டு வாங்க!

2 மாணவர்கள் தேர்வுக் கூடத்திற்குச் சென்ற உடனே நேராக தேர்வு நடக்கும் அறைக்கு சென்று விட வேண்டும். வெளியில் நின்று நண்பர்களோடு விவாதிக்கக் கூடாது. ஏனென்றால் உங்கள் நண்பர் உங்களுக்கு தெரியாத கேள்வியைப் பற்றி விவாதித்தால் அது உங்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும்.
எனவே மாணவர்கள் நேராக தேர்வு அறைக்குச் செல்ல வேண்டும். தேர்விற்கு செல்லும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியம் நம்பிக்கையாகும்.

3 தேர்வு அறைக்குச் செல்லும் வரையில் கையில் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டே செல்லக் கூடாது. அது நல்லதல்ல. தேர்வுக் கூடத்திற்கு செல்லும் போது குறைந்தது அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே படிப்பதை நிறுத்தி விட வேண்டும். யாரிடமும் விவாதிக்காமல் அமைதியாக இருப்பது நன்மை பயக்கும்.

4 தேர்வுக் கூடத்திற்குச் செல்லும் முன்பே தன்னுடைய பாக்ஸ் மற்றும் சட்டைப் பையில் ஏதேனும் தேவையில்லாத தாள்கள் இருக்கின்றனவா என சரிபார்த்து செல்ல வேண்டும். மேலும் தனது டெஸ்க்கில் ஏதேனும் எழுதியிருப்பதைப் பார்த்தால் அதை அழித்து விட வேண்டும். முடியவில்லை என்றால் கண்காணிப்பாளரிடம் தெரிவித்து விட வேண்டும்.

5 தேர்வு அறையில் வினாத்தாளை வாங்கிய உடன் நன்கு அதனை வாசித்துப் பார்க்க வேண்டும். ஏதேனும் ஓரிரு கேள்விகள் தெரியவில்லை என்றாலும் நம்பிக்கையை விட்டுவிடக் கூடாது. தெரிந்த கேள்விகளை முதலில் எழுத வேண்டும். பின்வு ஓரளவு தெரிந்த கேள்விகளை எழுத வேண்டும். பின்பு தெரியாத கேள்விகளுக்கு யோசித்து உங்களுக்கு தெரிந்த பதிலை எழுத வேண்டும்.

6 தேர்வினை எதிர் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது நம்பிக்கையே. நம்பிக்கை இழந்து விட்டால் தெரிந்த கேள்விகளையும் தவறாக எழுதும் நிலை ஏற்பட்டு விடும். எனவே மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வினை எழுத வேண்டும்.

7 தேர்விற்கு பழைய பேனாவையே எடுத்துச் செல்ல வேண்டும். புது பேனாவை எடுத்துச் சென்றால் அதைப் பயன்படுத்தி வேகமாக எழுத வராது. எனவே பழக்கப்பட்ட பழைய பேனாவையே தேர்விற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

8 தேர்வில் எந்தக் கேள்வியையும் விடக் கூடாது. எல்லாக் கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். தேர்வு ஆரம்பித்த உடன் எழுத ஆரம்பிக்கும் கேள்விகளுக்கு சற்று நேரம் எடுக்கும். எனவே முதலில் சிறிய கேள்விகளை எழுத ஆரம்பிக்க வேண்டும்.

8 ஓரே கேள்விக்குப் பதில் அளிப்பதிலேயே அதிக நேரத்தை செலவழிக்கக் கூடாது. கேள்விக்கான பதிலைப் பக்கம் பக்கமாக எழுத வேண்டும் என்பது அவசியமில்லை. சரியான குறிப்புகளை மட்டும் பாயிண்ட் பாயிண்ட்டாக எழுதினால் போதும். சிறிய கேள்விகளுக்கு தகுந்தவாறு பதில் அளிக்க வேண்டும். சிறிய கேள்விகளுக்கும் உட்கார்ந்து பக்கம் பக்கமாக எழுதக் கூடாது.

10 தேர்வு எழுதி முடித்து விட்டு உங்களுக்கு நேரம் இருந்தால் பின்பு எழுதிய கேள்விகளில் முக்கியமான குறிப்புகளை அடிகோடிட்டு காண்பிக்கலாம். மேலும் அழகுப்படுத்தலாம். தேர்வுத் தாளை சமர்ப்பிப்பதற்கு முன்பு வினாத்தாளில் வினாக்களுக்கான நம்பர்களை சரியாக எழுதியுள்ளீர்களா என சரிப்பார்த்து விட்டு சமர்ப்பியுங்கள்.

11 மாணவர்கள் தேர்வினை முடித்துவிட்டு நேராக வீட்டிற்குச் செல்ல வேண்டும். எழுதிய தேர்வைக் குறித்து யாரிடமும் விவாதிக்கக் கூடாது. ஏனென்றால் நீங்கள் எழுதியிருக்கும் பதிலும் அவர்கள் சொல்லும் பதிலும் வேறு வேறாக இருந்தால் அது உங்களை சோர்வுக்குள்ளாக்கி விடும். எனவே தேர்வு எழுதி முடித்த உடன் எழுதிய தேர்வினைப் பற்றி விவாதிக்காமல் நேரே வீட்டிற்குச் செல்லுங்கள்.

12 தேர்வுக் கூடத்திலிருந்து வீட்டிற்குச் சென்ற பின்பும் யாரிடமும் எழுதிய தேர்வினைப் பற்றி பேசாதிருங்கள். தேர்வு எப்படி எழுதியிருக்க எனக் கேட்டால் நன்றாக எழுதியிருக்கிறேன் எனக் கூறுங்கள்.

13 வீட்டிற்குச் சென்ற பின்பு சிறிது ஓய்வினை எடுத்துக் கொண்டு அதன்பிறகு அடுத்த தேர்விற்கான பாடங்களை படிக்க ஆரம்பியுங்கள்.

14 படிக்கும் போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 அல்லது 10 நிமிடம் ஓய்வினை எடுத்துக் கொண்டு படியுங்கள். ஓய்வு எடுப்பதற்காக அதிக நேரத்தை வீணாக்கக் கூடாது. புதிதாக தேர்விற்கு முந்தைய நாள் படிக்காதீர்கள். ஏற்கெனவே படித்தவற்றை மறுபடியும ரிவிசன் விடுங்கள்.

15 தேர்விற்கு முந்தைய நாள் விடிய விடிய தூங்காமல் உட்கார்ந்து படிப்பது மிகவும் தவறாகும். அவ்வாறு செய்யும் போது உங்கள் மூளை சோர்வடைந்து விடும். படித்தது ஞாபகத்திற்கு வராது. தேர்வு அறைக்கு சென்றவுடன் தூக்கம் தான் வரும். எனவே தேர்விற்கு முந்தைய நாள் குறைந்தது 6 அல்லது 7 மணி நேரமாவது நன்கு உறங்கி எழுந்து செல்லுங்கள்.

மேலே உள்ளவற்றை நீங்கள் செய்யும் போது கட்டாயம் பொதுத் தேர்வு உங்களுக்கு புகழ் சேர்க்கும் தேர்வாக அமையும்.

English summary
Given the little tips very useful for you at the time of examination.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia