நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை ! வலுக்கும் போராட்டம்!!,,

Posted By:

தமிழ்கத்தில் நீட்தேர்வு குறித்து சிக்கல் கடந்த நான்கு மாதம் நடைபெறுகிறது . நீட்தேர்வு மத்திய அரசு மருத்துவ படிப்புகளுக்கு நாடு முடுவதும் நடத்தும் நுழைவு தேர்வில் பங்கேற்று பெரும் மதிபெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பிற்கான இடத்தை உறுதி செய்யும் தேர்வாகும்.

நீட் தேர்வை தமிழகத்திற்கு தேவையில்லை என தமிழக மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வினை இதுவரை தமிழகம் எதிர்கொண்டது இல்லை ஆனால் நீட் தேர்வினை தமிழகம் எழுதவேண்டியது குறித்து உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பையடுத்து தமிழக அரசு தொடுத்த மேல்முறையீட்டு வழக்கினை மறுத்து நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் அத்துடன் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்படமுடியாது என்ற தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்த அனிதா என்ற தமிழக கிராமத்து மாணவியின் வழக்கிலும் தனக்கான சரியான நியாயம் கிடைக்காமல் கனவுப்பாடம் கைகூடாமல் மனஉலைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டாள் .

அனிதா இறப்பு தமிழம் கொந்தளிப்பு :

நீட்தேர்வினால் அதிக மதிபெண் பெற்றிருந்தும் மருத்துவம் படிக்க முடியாதநிலையில் தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்காக சக மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

நீட்தேர்விலிருந்து தமிழகதுக்கு விலக்கு வேண்டும் . நீட் தேர்விலிருந்து தமிழகத்து மாணவர்கள் காக்கப்பட வேண்டும் . என்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதியிலிருந்து மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர் .

ஏழைமாணவியின் இறப்பை தடுக்கமுடியாத குற்ற உணர்வினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆளும் மத்திய மாநில அரசை எதிர்த்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தவண்ணமுள்ளது .  அரசியல் பின்புலம் கொண்ட சினிமா நடிகர்கள் மற்றும் விளையாட்டுதுறை வீரர்கள், மூத்த நடிகர்கள் அனைவரும் அரசை எதிர்த்து குரல் கொடுத்தனர் .

மாணவர்கள் போராட்டம் :

தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்துவருகின்றது .நீட் தேர்வின் காரணமாக அனிதாவை இழந்தோம் இனி யாரையும் இழக்க விரும்பவில்லை என தெரிவித்து மாணவர்கள் தமிழம் முழுவதும் போராடி வருகின்றனர்.

"நீட் தேவையில்லை , நீட் கம்பியை நீட்டு ,,தமிழகதுக்கு வேண்டும் விலக்கு" என்ற வாசகத்துடன் போராடத்தை தொடந்து நடத்தி இரண்டு நாளாக நடத்தி வருகின்றனர் . தமிழ்நாட்டில் 40க்கு மேற்ப்பட்ட இடங்களில் போராட்டம் வழுத்து வருகின்றது .

லயோலா கல்லுரி வளாகத்தில் மாணவர்கள் மிகுந்த ஆவேசத்தில் நீட்டுக்கு எதிரான வாசகங்களை கூறி போராட்டம் நடத்திவருகின்றனர். கோவை அரசு கல்லுரியில் மாணவர்கள் போராட்டம் வழுத்து வருகின்றது . மதுரை மற்றும் கடலூர் மாணவர்கள் மிகுந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தின் போக்கு இன்னும் எந்த அளவிற்கு அதிகரித்து செல்லும் என்பது யூகிக்க முடியாத அளவிற்கு கொந்தளிப்பு நடைபெறுகின்றது . அரசு மவுனம் கலைத்து முடிவெடுக்கவில்லையெனில் அதன் விளைவை அரசு சந்திக்க நேரிடும் .

சார்ந்த பதிவுகள்:

நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் மாணவி தற்கொலை 

நீட் தேர்வு குறித்து மனஉலைச்சலுக்கு ஆளான மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கு கோர்ட் உத்தரவு

English summary
here article tell about students protest against neet exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia