நீட் தேர்வு எதிர்த்து அதிகரித்து வரும் போராட்டங்கள் ,,!

Posted By:

நீட் தேர்வினை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்களால் நடத்தப்படுகின்ற போரட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது . இடது சாரிகள் , வழக்கறிஞர்கள் மற்றும் மாணவ அமைப்புகள் கோவை அரசு கல்லுரி மாணவர்கள் அத்துடன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக மாணவர்கள் அனைவரும் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வானது கார்பரேட்டின் சதி என்று மாணவர்கள் கூக்குரலிட்டு வருகின்றனர் . நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட அனிதா தந்தைக்கு ஏழு லட்சம் வழங்குவது நீதியா என்று மாணவத் தரப்பினரிடையே கொந்தளிப்பு அதிரித்து வருகின்றது . மாணவ மாணவிகளின் போரட்டத்தினால் அரசு ஸ்தம்பித்து நிற்கின்றது .

மாணவர் அணியணியாக கூடி வருகின்றனர் ஆயிரக்கணக்கில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது . நீட்தேர்வினை எதிர்த்து வழக்கரிஞர்கள் ஆசிரியர்களும் போராட்டத்தில் இறங்கிவருவதனால் அரசு இதுகுறித்து விரைந்து முடிவெடுத்து மத்திய அரசுக்கு தெரிவித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும். தமிழக மற்றும் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் இல்லையெனில் இப்போராட்டம் இன்னும் வலுவடையும் .

கொந்தளிக்கும் மாணவ கோபம்

அரசின் அமைதி ஆர்ப்பரிக்கும் மாணவ கோவம் பதில் யாரின் கையில் என்ற கலவரநிலவரத்தில் போராட்டத்தின் போக்கு 

நீட் தேர்வை எதிர்த்து திரண்ட கூட்டம்

போராட்டத்தில் உறுதியுடன் நின்று அரசை திக்குமுக்காட செய்கின்றனர் மாணவர்கள் 

நீட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மாணவர்கள் சாலைமறியல் , நீட் அலுவலகம், கல்லுரி வளாகங்களில் என காலவரையரையற்ற போராட்டம் 

திரளான மாணவ கூட்டம்

திரண்ட மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது போராட்டத்தை நிறுத்த நீட் நீக்கப்பட வேண்டும் என முழக்கங்கள்  வலுபெறுகின்றன.

மாணவி அனிதா தற்கொலை குறித்து விசாரிக்க பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது . மேலும் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுத்து விரைந்து முடிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது இவ்வாறு நீதிமன்ற வழக்குகளும் முடக்கப்படுவதால் மாணவர்களின் கோவம் அதிகரித்து வருகிறது .

சார்ந்த பதிவுகள்:

நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கிடைக்காமல் மாணவி தற்கொலை 

நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை ! வலுக்கும் போராட்டம்!!,,  

English summary
here article tell about students protest in various place of tamilnadu against Neet exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia