காகிதங்களிலிருந்து கலைப்பொருட்களை உருவாக்கும் மாணவர்கள்!!

சென்னை: வீணாகும் காகிதத்திலிருந்து கலைப்பொருட்களை உருவாக்கி வியக்க வைக்கின்றனர் அரசு பள்ளி மாணவர்கள்.

கர்நாடகா

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலுள்ள கிடதகோனேனஹள்ளி அரசு உயர் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இந்த கலைப்பொருட்களை உருவாக்கி வியக்க வைக்கின்றனர்.

கலைப்பொருட்கள்

இந்தக் கலைப்பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு அரசு பள்ளிக்கு விளையாட்டுக் கருவிகள், தோட்டக் கலை கருவிகளை வாங்கியுள்ளனர்.

கேஐஐடி

கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி (கேஐஐடி) நிறுவனர் டாக்டர் அச்சுதா சமந்தா, அண்மையில் ஆர்ட் ஆஃப் கிவிங் என்ற அமைப்பைத் தொடங்கினார்.

ஆர்ட் ஆஃப் கிவிங்

இந்த அமைப்பு மூலம் பல்வேறு பயிற்சிகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

காகிதங்கள்

வீணாகும் காகிதப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றிலிருந்து கலைப்பொருட்களை உருவாக்கும் பயிற்சியையும் அவர்கள் கற்றுக்கொடுத்துள்ளனர்.

மாணவர்கள்

இதைத் தொடர்ந்து கிடதகோனேனஹள்ளி அரசுப் பள்ளி மாணவர்கள் காகிதப் பொருட்களிலிருந்து கலைப்பொருட்களை உருவாக்கி காட்டினர்.

பள்ளிக்குக் கருவிகள்

இந்தப் பொருட்களை விற்பனை செய்ததன் மூலம் பள்ளிக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், தோட்டக்கலை கருவிகளையும் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

பரிசுப் பொருட்கள்

கலைப்பொருட்கள், பொம்மைகள், பறவைக் கூடுகள், கிண்ணங்கள், பரிசுப் பொருட்கள், புகைப்பட பிரேம்களை உருவாக்கியுள்ளனர்.

நம்பிக்கை

இதுகுறித்து 6-ம் வகுப்பு மாணவி எஸ். மது கூறியதாவது: இந்தக் கலையைக் கற்றுக்கொண்டதன் மூலம் எங்களுக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது. இதை அனைவருக்கும் கற்றுக்கொடுப்போம் என்றார்.

பெருமை

பள்ளி தலைமை ஆசிரியர் சி. வசந்தகுமாரி கூறியதாவது: எங்கள் மாணவர்களை நினைக்கும்போது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் இந்தக் கலையைக் கற்றுத் தருகிறோம். இதைப் போலவே அவர்களுக்கு விளையாட்டு, தோட்டக் கலையைக் கற்றுத் தருகிறோம் என்றார் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Ideally, sports should have been an integral part in every school. Sadly, many schools don't have the required infrastructure or facilities to nurture the students. In the process, it is the students who suffer a lot. Instead of cribbing of not having any facility, the students studying at the Government Higher Primary School, Gidadakonenahalli (near Nagarabavi) set a unique example on Friday.The students organised an exhibition of their craft works (made entire out of the waste which was dumped next to their school compound) in their school campus.Gidadakonenahalli Government Higher Primary School Headmistress C. Vasantha Kumari said, "We are really proud of our students. We have always believed and taught students that it is not enough just to excel in academics but one should also be good at sports and gardening. Today, our school has set a unique example and hope the other schools to follow this model."
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more