சென்னை ; என்ஜீனியரிங் படிப்பில் சேர கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை தயாராக எடுத்து வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
தமிழ் நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் எஞ்ஜீனியரிங் கல்லூரிகள் மற்றும் சுயநிதி எஞ்ஜீனியரிங் கல்லூரிகள் மொத்தம் 554 உள்ளன.
தமிழ் நாட்டில் உள்ள கல்லூரிகளில் எஞ்ஜீனியரிங் கல்லூரிகளில் பி.இ மற்றும் பி.டெக் படிப்பில் சேர அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பு
12ம் வகுப்பு மாணவ மாணவியர்கள் இணையதளத்தில் தங்கள் பெயருடன், பிளஸ்-2 மதிப்பெண்களை பதிவு செய்யும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலந்தாய்வு
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (மே) 12ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். ஆகவே கலந்தாய்விற்கு வரும் மாணவ மாணவியர்கள் தேவையான சான்றிதழ்களை இப்போதே தயாராக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்ப்பட்டுள்ளது.
சாதி சான்றிதழ்
சாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், போன்றவற்றை மாணவர்கள் முன்கூட்டியே பெற்றுத் தயாராக வைத்துக் கொள்வது நல்லது. முன்கூட்டியே சான்றிதழ்களை தயாரா வைத்துக் கொள்வது கலந்தாய்வின் போது பயனுள்ளதாக அமையும்.
முதல் பட்டதாரி சான்றிதழ்
நீங்கள் உங்கள் குடும்பத்தில் பட்டப்படிப்பு படிக்கப்போகும் முதல் மாணவர் என்றால் அதற்கு கட்டணச்சலுகை அளிக்கப்படும். கட்டணச் சலுகையைப் பெற முதல் பட்டதாரி சான்றிதழ் தேவைப்படும். அதனை நீங்கள் முன்கூட்டியே அப்பளை செய்து வாங்கி வைத்துக் கொண்டால் உங்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படும்.


Click it and Unblock the Notifications

